tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தஞ்சாவூர், செப்.20 - 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பேராவூரணி உதயம் விழா அரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. 

 

நிகழ்ச்சிக்கு, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஏ.மார்ட்டின் வரவேற்றுப் பேசினார். 

 

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 31 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 562 மகளிருக்கு ரூபாய் 4 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

 

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டு மகளிர் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். எவரையும் எதிர்பார்த்திருக்க கூடாது. சுயசார்பு உடையவராக இருக்க வேண்டும் என உயரிய நோக்கத்தில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரால் கடந்த 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என சட்டம் இயற்றிவர் கலைஞர். பெரியாரின் கனவுகளுக்கு, கலைஞரின் திட்டங்களுக்கு இன்றைக்கு செயல் வடிவம் தந்து கொண்டிருப்பவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த 9 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். அதனொரு பகுதியாக இன்று சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை பெறும் சுய உதவிக் குழுக்கள் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி, வங்கிக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு முறையாக செயல்படும் சுய உதவி குழுக்களுக்கு மீண்டும் இரு மடங்காக வங்கி கடன் வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைக்கு அனைத்து வங்கிகளும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க முன் வருகின்றனர் என்றால், அதற்கு உங்களுடைய நேர்மையும் அர்ப்பணிப்பு உணர்வுமே காரணம். தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர்க்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களை தனது குடும்பத்தில் ஒருவர் போல் கருதி, மகளிர் உரிமைத் தொகையை ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வருகிறார். முதலமைச்சர் எப்படி உங்கள் மீது அக்கரையாக இருக்கிறாரோ, அதேபோல் நீங்களும் இந்த ஆட்சிக்கு பக்கபலமாக, உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார். 

 

 

இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 

சோ.நாகேந்திரன் (வ.ஊ),  

சு.சடையப்பன் (கி.ஊ), ஊராட்சி மன்றத் தலைவர்கள் சொக்கநாதபுரம் ராம்பிரசாத், நாடியம் பிரேம்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாமா செந்தில், சாகுல்ஹமீது மற்றும் ராஜ்மோகன், சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க