tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தூத்துக்குடி நவ. 16–
 தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என  துணை முதல்வர் உதயநிதி உறுதி அளித்தார்.
தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் ராஜபாளையம் எம்எல்ஏ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: 
     சுயமரியாதை திருமணங்கள் திராவிட இயக்கங்கள் உருவானதால் தான் நடந்து வருகிறது. தமிழில் திருமணம் ,தமிழில் அர்ச்சனை என்பதெல்லாம் திராவிட இயக்கம் தோன்றியதால் தான் வந்தது.   பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திமுக ஆட்சியில் தான் வந்தது .பிற்போக்குத்தனத்தை வேரோடு பிடுங்கி எறிந்து பெண்களுக்கு சம உரிமை கிடைக்க செய்ததும் திராவிட இயக்கங்கள் தான்.
இதனால் தான் இன்றைக்கு இந்த விழாவில் கூட பெரும்பாலும் பெண்கள் தான் அதிகமாக வந்துள்ளனர். இருக்கையில் அமர்ந்துள்ளதும் பெண்கள் தான்.ஆண்கள் ஓரத்தில் நிற்கும் அளவிற்கு பெண்களுக்கு ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியாக இருந்தாலும் சரி பெண்களுக்கு தான் மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது .
மகளிர் உரிமை தொகை திட்டம் மாதம் ஆயிரம் ரூபாய், புதுமைப்பெண் திட்டம், பெண்களின் சுமையை போக்க குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என்று எண்ணற்ற திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தம்பதியர்களுக்கு ஒரு வேண்டுகோளாக நான் வைக்க விரும்புவது, குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதுதான். அனைவரும் இதனை செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க