tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மே 22, 2024

தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப் பட்ட உறக்க ஆய்வகம் செவ்வாய்க் கிழமை தொடங்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலா ஜிநாதன் செவ்வாய்க்கிழமை தெரிவித்த தாவது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்து வப் பிரிவில், அதிநவீன பிரான்கோஸ் கோபி என்ற மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவியும், உறக்க ஆய்வகமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிறைய பேருக்கு உடல் பருமன் காரணமாக குறட்டைச் சத்தம் உருவாகி தூக்கமின்மை நோய் ஏற்படும். இதனால், உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான பரிசோதனைக் கூடமாக இந்த உறக்க ஆய்வகம் செயல் படும். இரவு நேரத்தில் தூங்கும்போது தொண் டையில் சதை வளருதல், உடல் பருமன் அல்லது வேறு காரணங்களால் உடலில் மாறுபாடு தெரியும். இப்பிரச்சனை கார ணமாக அவர்களது பகல் நேர செயல் பாடு குறைதல், ரத்த அழுத்தம், சர்க்கரை சத்து பிரச்சனைகளை உருவாக்கும். இதை பரிசோதனை செய்து உறுதிப் படுத்துவதற்கும், பரிசோதனை யின்போது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங் களைக் கண்காணிப்பதற்கும் முதல் முறையாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறக்க ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்தப் பரிசோதனைக்கு ரூ.5 ஆயிரம் செல வாகும். இது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மாக செய்யப்படும். இந்தப் பரிசோதனை இரவு நேரத்தில் தூங்கும்போது மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனையில் குறட்டை வரும்போது உடலில் ஏற்படும் மாற்றம், ஆக்ஸிஜன் அளவு குறைவது, இதயத் தில் மாறுபாடு போன்றவை 6 மணி நேரத் துக்கு பதிவாகும். இதனால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு மட்டுமே பரிசோ திக்க முடியும். இந்தப் பரிசோதனை தஞ்சா வூரில் வேறு எங்கும் கிடையாது. மூன்றாவதாக... அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை சென்னை, மதுரைக்கு அடுத்து தஞ்சாவூரில்தான் தொடங்கப் பட்டுள்ளது. மேலும், தொண்டை, மூச்சுக்குழா யில் பட்டன், கோழி எலும்பு, மீன் முள், கொக்கிகள் போன்றவை சிக்கிக் கொண் டால் எடுப்பது சிரமம். இதை மூச்சுக் குழாய் உள்நோக்கி கருவி மூலம் வீடியோ திரையில் பார்த்துக் கொண்டே தொண்டை, மூச்சுக்குழாயில் சிக்கியதை நிறைய சேதாரம் ஏற்படாமல் எடுத்துவிட முடியும். இதுதவிர, மூச்சுக்குழாயில் ஏற்படக் கூடிய சாதாரண கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் போன்றவற்றையும் கண்டறிய லாம். இந்தப் பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.10 ஆயிரம் செல வாகும். இது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மாக செய்யப்படும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்த மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை 18 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கும் தமிழக அரசு அங்கீகாரச் சான்று வழங்கி யுள்ளது என்றார் பாலாஜிநாதன். அப்போது, மருத்துவக் கண்காணிப் பாளர் சி.ராமசாமி, நிலைய மருத்துவ அலு வலர் ஏ. செல்வம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க