tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்­­னை, மே 17–

தமி­ழ­கத்­தில்­மீண்டும் கூலிப்­படை கலாச்­சாரம் தலை தூக்கி விட்­ட­தாக தமி­ழிசை கூறி­னார்.

 செனை விருகம்பாக்கத்தில் பா.ஜ. தண்ணீர் பந்­தலை தமி­ழி­சை சவுந்தரராஜன் திறந்­து வைத்தார். பொது மக்களுக்கு இளநீர்,வெள்ளரிக் காய், தர்பூசணி, கிர்ணி பழங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறி­ய­தா­வ­து: 

வெயில் அதிகமாக இருக்கும் என்று நினைத்து தண்ணீர் பந்தல் திறந்தோம். ஆனால், இப்போது மழை வந்துவிட்டதால் சுடச் சுட உணவும் பரிமாறிவிட்டோம். கோடை வெயில் தணிய வேண்டும் என்பதில் நாம் அனைவரும் அக்கறையாக இருந்தோம். சூரியன் மறைந்திருப்பதும் எனக்கு ஒருவகையில் மகிழ்ச்சிதான். மழை பெய்துள்ளதால் குளங்கள் நிரம்பும். குளங்கள் நிரம்பினால் தாமரை மலரும். ராகுல், ஸ்டா­லின் எல்லோரும் பதற்­றத்தில் உள்­ளனர். மூன்­றா­வது முறை­யாக மோடி பிர­தமர் ஆவார். எங்கள் இலக்கே 2047 தான்.

 தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமான அளவு உள்ளது. இளைஞர்கள் போதையால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளில் கத்தி, துப்பாக்கி உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுகின்றன. கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் மீண்டும் தலையெடுத்துள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இன்று டெங்கு தினம். சனாதனத்தை டெங்கு போல ஒழிப்பேன் என்று கூறினார்கள். ஆனால், டெங்குவையே இவர்கள் ஒழிக்கவில்லை. 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. ஆகவே, அரசு உடனடியாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தற்போது மழை வர ஆரம்பித்துள்ளது. மழைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு எடுக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஆகவே, அரசு உடனடியாக மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்­வாறு தமி­ழிசை கூறி­னார்.

+++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க