tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஆக. 9– 

 

‘‘தமிழக அரசு திவால்ஆனதை மறைப்பது ஏன் என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார். 

 

மதுரை அருகே மண்ணாடிமங்கலம் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

 

தமிழகத்தில் தி.மு.க., அரசு திவாலாகி விட்டது. ஆனால், அதை மறைத்து வருகின்றனர். உண்மை நிலவரத்தை மக்களுக்குஎடுத்துச் சொல்ல வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் கடமை. 

மத்திய அரசும் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் பெருந்தன்மையோடும், நியாய உணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும். பேரிடர் நிதி வழங்குவதில் கூட கடுமை காட்டக் கூடாது; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கக்கூடாது. 

 

இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரச்னைக்கு நியாயம் கேட்டும், மீனவர்களுக்கு இருக்கும் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சமீபத்தில் தமிழக மீனவர்கள் அமைப்பைச் சேர்ந்தோர் என்ற பெயரில் சிலர் சந்தித்தனர். இதற்கு ஏற்பாடு செய்தவர் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. 

அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த மீனவர்கள், எந்த அமைப்பின் பிரதிநிதியும் இல்லை; பாதிக்கப்பட்டோரும் இல்லை. 

 

கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது. அதை தமிழக மீனவர்களும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு தரப்பில் அதிகாரிகளோ, அமைச்சர்களோ யார் என்ன சொன்னாலும், மீனவர்கள் அதை நம்புவதில்லை. 

 

குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் உடன் நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை.  

தமிழகத்தைப் பொறுத்த வரை, அரசனோ, ஆண்டியோ, அரசியல் கட்சி தலைவரோ யாருக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கு என்பதே இல்லை. 

 

இவ்வாறு அவர் பேசினார். 

+++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க