tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுச்சேரி, ஜூன் 20–

-

சொல்வதைத் செய்கிற தமிழ்நாடு அரசு போல செயல்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தினார்.

 

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான இரா. சிவா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

 

கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதம் வேலை செய்ய முடியவில்லை. திட்ட ஒதுக்கீட்டில் ரூ. 300 கோடி அளவிற்கு வேலை செய்ய முடியவில்லை.

கடந்த காலத்தில் அதில் ரூ. 500 கோடி அளவிற்கு துண்டு விழுந்துள்ளது. ஒன்றிய அரசின் திட்டத்தில் ரூ. 650 கோடியில் ரூ. 200 கோடி தான் வேலை செய்துள்ளார்கள். மிதமுள்ள ரூ. 400 கோடி செலவு செய்யவில்லை. இதுகுறித்த கேள்வியை நான் கூட்டத்தில் முன்வைத்தேன். 

 

வரவு–செலவை பார்க்கும் கூட்டமாக நாங்கள் இதை பார்க்காமல் வருங்காலத்தில் சொல்வது எதையும் செய்யாமல் இருப்பதை வாடிக்கையாக கொள்ளாமல், தமிழகத்தில் எப்படி சொல்வதை செயல்படுத்துகிறார்களோ அதைப்போல் தாங்களும் செயல்படுத்துகின்ற பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். 

வட்­டிக்கு அதிகம்

 முக்கிய பிரச்சனையாக உள்ள மாநிலத்தின் கடன் தொகை மற்றும் அதற்கு செலுத்தும் வட்டித்தொகை குறைப்பதற்கான வழியை ஆராய வேண்டும். மாநிலத்தில் நலத்திட்டங்களுக்கு ரூ. ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது என்றால் வட்டிக்கு மட்டும் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி கட்டப்படுகிறது. இது மாநில வளர்ச்சியை மிகவும் பாதிக்கிறது. 

புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்குண்டான புதிய தொழில் கொள்கையை இந்த அரசு கொண்டு வர வேண்டும். சுற்றுலா நகரமாக இருக்கின்ற புதுச்சேரியில் புதிய திட்டம் எதையும் இந்த அரசு கொண்டுவரவில்லை. குறிப்பாக நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு மட்டும்தான் உள்ளது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். 

சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 

50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்று காலாவிதியாகி விட்டது. புதிய திட்டமும் தோல்வி கண்டு மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஏஎப்டி திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

 

 

 

அதேபோல், நகரத்தின் வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யாமல் பாதியில் நிற்கிறது. குறிப்பாக ரூ. ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித்தரும் துறைமுகம் தனியாருக்கு தாரை வாக்கப்பட்டுள்ளது. 12 சதவீதம் ரூ. 1260 கோடி இலாபம் ஈட்டியிருக்கக் கூடிய மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க நினைப்பதும், மின் கட்டணத்தை உயர்த்துவதும் ஏற்புடையதல்ல. மக்கள் நலன் கருதி அதனை பரிசீலனைச் செய்ய வேண்டும். 

 

இதுபோன்று மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை திட்டக்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளேன். முதல்வரும் அவரது பதிலில் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். ஆகவே. வருகின்ற பட்ஜெட் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை நாங்கள் அரசியலாக பார்க்கவில்லை. அது ஆட்சியாளர்களின் செயல்பாட்டில் தான் உள்ளது. 

 

இவ்வாறு அவர் கூறினார்.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க