tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தஞ்சாவூர், ஆக. 2–

 

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்குகளை நேற்று ஆய்வு செய்த கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:

 

தமிழகத்தில், 20.44 டன் சேமிப்பு செய்யும் வகையில், 253 செயல்முறை கிடங்கு, 104 சேமிப்பு கிடங்கு, 18 செமி கிடங்கு என, 380 கிடங்குகள் உள்ளன. கூட்டுறவுத்துறை வாயிலாக, 2021 – -22ம் ஆண்டில், 10,292 கோடி ரூபாய், 2022 – 23ம் ஆண்டில், 13,942 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

 

இதில், 2023 – -24ம் ஆண்டில், 18.36 லட்சம் விவசாயிகளுக்கு, 15,542 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கூட்டுறவுத்துறை, 16,500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், 2,500 கோடி ரூபாய் கால்நடைகளுக்கான கடன், மத்திய கால கடன், 1,090 கோடி ரூபாய் என, மொத்தம் 20,000 கோடி ரூபாய் கடன் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

 

தமிழகத்தில், 36,954 ரேஷன் கடைகளில், 29,000 கடைகள் சொந்த கட்டடங்களிலும், 7,997 கடைகள் தனியார் கட்டடங்களிலும் உள்ளன. இவற்றை சொந்த கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்தாண்டு 5,000 கடைகளின் தரம் உயர்த்தப்பட உள்ளது. எலி தொல்லையை கட்டுப்படுத்த கருவிகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக, 2.88 லட்சம் ரேஷன் கார்டுகள் இம்மாத இறுதியில் அச்சடிப்பு துவங்கி விநியோகம் செய்யப்படும்.

 

பாமாயில், பருப்புக்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஜூலை மாத ஒதுக்கீடு முழுதும் ஆக., 5ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் மாதத்துக்கு சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழக முழுதும் கடந்த கொள்முதல் ஆண்டில், 42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 33.14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 3.71 லட்சம் விவசாயிகளுக்கு, 7,221 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு தான். 

 

சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. சிலர் தனியாரிடம் விற்பனை செய்ததும் காரணம். இருப்பினும், இந்தாண்டு ஆக., 31ம் தேதி வரை கொள்முதல் காலம் இருப்பதால், 37 லட்சம் டன் வரை எதிர்பார்க்கிறோம்.

 

மத்திய அரசு நெல் கொள்முதலில், 936 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்கியுள்ளது. இன்னும், 2,000 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதை பெற முயற்சித்து வருகிறோம். பிளாஸ்டிக் அரிசி குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க