tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூன் 28– 

பதினெட்டாவது மக்களவை துவங்கி உள்ள நிலையில், திடீரென செங்கோல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்ற புதிய கட்டடத்தில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள தமிழகத்தின் செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்பி பிரச்னை எழுப்பியுள்ளார். இதற்கு லாலு யாதவின் மகளும், அந்த கட்சியின் எம்பியுமான மிசா பார்தியும் ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘செங்கோல், அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய பொருள்’’ என்று விமர்சித்தார். 

 

யோகி

செங்கோல் எதிர்ப்புக்கு பாஜ கூட்டணி தரப்பில் கடும் கண்டனம் குவிந்து வருகிறது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது எக்ஸ்தள பக்கத்தில், தமிழில் பதிவிட்டதாவது: இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாடி மதிப்பதே கிடையாது. ஏனென்றால், அவர்களுக்கு அவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. இதன் மூலம், தமிழகக் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பை ஐஎன்டிஐ கூட்டணி வெளிப்படுத்தியிருக்கிறது.  

செங்கோல், இந்தியாவின் தர்ம பாரம்பரிய பெருமித சின்னம். அதை பார்லி.யில் பிரதமர் மோடி நிறுவியது, உன்னதமான நடவடிக்கை. சமாஜ்வாடியின் எதிர்ப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

 மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் (லோக் ஜன சக்தி) : நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களுக்கு பிரதமர் மோடி உரிய மதிப்பை பெற வைத்திருப்பதில் என்ன தவறு? இப்படி வீண் சர்ச்சையை ஏற்படுத்துவதற்காகவா, சமாஜ்வாடி கட்சியினரை எம்பிக்களாக உ.பி. வாக்காளர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்?  

திமுக ஆதரிக்கிறதா?

பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனாவாலா : கட்சியை குடும்ப கம்பெனியாக நடத்தி கொண்டிருப்பவர்கள் ஜனநாயகம், அரசியல் சட்டம் என்றெல்லாம் பேசுவது வேடிக்கை. அகிலேஷ் குடும்பத்தில் அவர், அவரது மனைவி டிம்பிள், ஆதித்ய யாதவ், தர்மேந்திர யாதவ், அக்‌ஷய் யாதவ் என 5 பேர் எம்பிக்கள். இதுதான் சமாஜ்வாடி ஜனநாயகமா? செங்கோல், ராஜ தண்டம் அல்ல; பாரம்பரிய தர்மத்தின் சின்னம். செங்கோல் ராஜ தண்டம் என்றால், முதல் பிரதமர் நேரு அதை ஏன் வாங்கினார்? இதற்கு சமாஜ்வாடியிடமோ, இண்டியா கூட்டணியிடமோ பதில் இருக்கிறதா? தமிழக செங்கோலை அவமதித்துள்ள சமாஜ்வாடியை திமுக ஆதரிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 சமாஜ்வாடி எம்பியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று, பாஜ எம்பிக்கள், சபாநாயகரிடம் முறையிட்டனர். அதனடிப்படையில் ‘கோரிக்கை நிராகரிக்கப்படும்’ என, அவர்களிடம் சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து, செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாடி எம்பி சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். 

***

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க