tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

உண்மை நிலையை எடுத்துக்கூறும் எடப்பாடிக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு, வலியுறுத்த வேண்டிய இடத்தில் வலியுறுத்தாமல், நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே தமிழகத்தின் உரிமைகளை காக்க அமைச்சர் துரைமுருகன் தவறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ஆட்சியில் இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வரும் நிலையிலும், கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்தோடு, தமிழகத்தின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

கபட நாடகம் ஆடுதல்; இரட்டை வேடம் போடுதல்; உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல்; நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்தல் போன்ற செயல்கள் ஆளும் தி.மு.க.-வினருக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

வாய்மொழி மவுனம் ஏன்?

காவிரி பிரச்சினையாகட்டும்; மேகதாது அணை கட்டும் பிரச்சினையாகட்டும்; முல்லைப் பெரியாறு பிரச்சனையாகட்டும்; பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டும் பிரச்சனையாகட்டும்; அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கும்போது அதை தட்டிக் கேட்க கையாலாகாத விடியா திமுக ஆட்சியாளர்கள், தங்கள் சுயநலத்திற்காக கைகட்டி, வாய்பொத்தி மவுனமாக வலம் வருவதை அண்ணன் எடப்பாடியார் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார்.

அதன் அடிப்படையில், கேரள அரசு தற்போது அமராவதி ஆற்றுக்கு வரும் நீரை தடுக்கும் வகையில், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை இந்த நாடகக் கும்பல் அரசு வேடிக்கை பார்ப்பதை தோலுரித்துக் காட்டினார். உடனடியாக சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார்.

புளுகு மூட்டை

தங்களுடைய கள்ளத்தன நடவடிக்கைகளை மக்கள் முன்பு எதிர்க்கட்சித் தலைவரால் தோலுரித்துக் காட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாத நீர்வளத் துறை அமைச்சர், வழக்கம்போல் பசப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிக்கை என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி; அதில் பொதுப்பணித் துறை மந்திரியாக இருந்தவரும் இவரே. ஒன்றிய அரசு -குன்றிய அரசு என்று வாய்ஜாலம் காட்டும் விடியா திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் அப்போது மத்தியில் கூட்டாக ஆண்டது. அப்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஊழல் செய்வதில் கவனம் செலுத்தி, தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்துவிட்டு, இன்று பகல் வேஷம் போடும் விடியா திமுக-வைப் பார்த்து மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

ஜெயலலிதாவின் நெஞ்சுரம்

எங்கள் புரட்சித் தலைவி அம்மா 2011-ல் ஆட்சிக்கு வந்த பின்பு, நெஞ்சுரத்துடன் சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாக, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013 அன்று செயலாக்கத்திற்கு வந்தது. அதற்காக தஞ்சையில், அனைத்து விவசாயிகள் சார்பில் மாபெரும் விழா எடுக்கப்பட்டு, எங்கள் அம்மாவுக்கு ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டம் வழங்கப்பட்டதை தமிழக மக்கள் மறக்கவில்லை. அம்மாவின் அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றத்தில் 16.2.2018-ல் இறுதி ஆணையைப் பெற்று, அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2023-ல் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெறமுடியாத கையாலாகாத விடியா திமுக அரசின் நீர்வளத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் வாய்ஜாலம் காட்டி உள்ளார்.

வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகளான விடியா திமுக அரசின் மந்திரிகளில், தலையாய மந்திரியான துரைமுருகன், சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும்; கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்; கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், விடியா திமுக அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தற்போது கேரளாவில் நடப்பது திமுக-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மக்களை ஏமாற்ற முடியாது

தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த ‘நாடக மாடல் விடியா திமுக அரசு’ கைவிட வேண்டும். காவிரி நீர் பிரச்சனை குறித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியான போராட்டம் நடத்தியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியாளர்களிடமும் வற்புறுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாகக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை விடியா திமுக ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சட்டத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க