tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 28

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 63 லட்சத்து 63 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இன்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில் பெண்கள் 86.16 சதவீதமும், மாற்றுத் திறனாளிகள் 2,87,461 பேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதமும் பயன் பெற்றுள்ளனர்.

நபார்ட் RIDF திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 550 கி.மீ நீளமுள்ள 287 சாலைப் பணிகளையும், 342 பாலங்கள் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள ரூ.1,221 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 193 கி.மீ நீளமுள்ள 107 சாலைப் பணிகள் மற்றும் 151 பாலங்கள் ரூ.354 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,208.88 கி.மீ. நீளமுள்ள 4,606 சாலைப்பணிகள் ரூ.1,884.03 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு உள்ளன.

ஊரக வீடு வழங்கும் திட்டங்கள்: தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 2016 -17 முதல் 2019- 20 வரையிலும் திராவிட மாடல் ஆட்சிக்காலமான 2021- 22 ம் ஆண்டுகளிலும் மொத்தமாக 7,50,405 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2016- 17 முதல் 6.5.2021 வரையிலான காலகட்டத்தில் 2,89,730 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2,97,414 வீடுகள் 7.5.2021 முதல் 14.02.2024 வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வீடுகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.

நமக்கு நாமே திட்டத்தில் மூன்று ஆண்டுகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பயன்பாட்டிற்காக 631 கட்டடங்களும், 73 கட்டடங்களும், பொதுமக்கள் பயன்படுத்த பேருந்து நிழற்குடை, பேருந்து நிலையம், கதிரடிக்கும் களம் உட்பட 5,377 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆண்டிற்கு 3 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மூன்றாண்டுகளில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ரூ.2,106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டத்தின்கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பயன்பாட்டிற்காக 5,209 கட்டடங்களும் 408 பிறதுறைக்கான கட்டடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிழற்குடை, பேருந்து நிலையம் எரிமேடை, சுடுகாடுகளுக்கு சுற்றுசுவர் போன்ற உட்கட்டமைப்புகள் உட்பட 26,920 பணிகள் எடுக்கப்பட்டு 16,247 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் அமைக்கும் பொருட்டு 2021 -22 ல் இருந்து இதுவரை 1,44,489 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் பிறகுடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு கழிப்பறை கட்ட போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் அந்தக் குடியிருப்புகளுக்கு இக்கால கட்டத்தில் 2,940 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டி கொடுக்கப் பட்டுள்ளன.

64 லட்சம் வீடுகளுக்கு

குடிநீர் இணைப்பு

ஜல் ஜீவன் திட்டம்: 2024 ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடவும், மற்றும் நீண்ட காலத் தேவைக்கு ஏற்பக் குறைந்த குடிநீர் சேவை கட்டணத்துடன் குடிநீர் விநியோகம் செய்வதே ஜல்ஜீவன் இயக்கத்தின் நோக்கமாகும். ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகளில் கிராமப் புறங்களின் 63,63,379 வீடுகளுக்கு ரூ.2,010,29 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள 6,40,313 சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு 58,746 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

7.5.2021 முதல் 13.2.2024 வரை சுழல்நிதி ரூ.629.55 கோடி, சமுதாய முதலீட்டு நிதி ரூ.629.55 கோடி நலிவு நிலை குறைப்புநிதி ரூ.14.59 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2,56,508 மகளிர் சுய உதவிக் குழக்களுக்கு வங்கிகள் மூலம் கடனாக ரூ.71,960.43 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க