tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக்.7– 

திமுக குடும்ப கட்சி என்று விமர்சிக்கும் போது எனக்கு கோபம் வராது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

திமுக எம்பி திருச்சி சிவா எழுதிய ‘எதிர்பாராத திருப்பம்’, ‘மேடையெனும் வசீகரம்’, ‘கேளுங்கள் சொல்கிறேன்’, ‘முரசொலியின் மடியில் தவழ்ந்தவை’, ‘காட்சியும் கருத்தும்’ ஆகிய 5 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. நுால்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். துணை முதல்வர் உதயநிதி வரவேற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் முன்னிலை வகித்தார். வைரமுத்து, சுப.வீரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியது: 

மிசா என்.சிவா என்ற பெயரை திருச்சி சிவா என்று மாற்றியவர் கருணாநிதி. இளைஞர் அணி தொடங்கிய காலத்தில் 5 பேரில் ஒருவராக இருந்தார். தன் உழைப்பால் உயரங்களை அடைந்தவர். மிசா கைது, அவரை அரசியல் தலைவராக மாற்றியது. சிறை என்ற பல்கலையில் படித்ததால், யாருடைய உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படாமல், இன்றைக்கும் செயல்படுகிறோம். சிவாவின் தாய் உண்மையான திராவிட தாய். இப்படி பல்வேறு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கட்சிக்கு தாரை வார்த்து கொடுத்ததால், வளர்ந்த கட்சி இது. அதனால் தான் எதிர்க்கட்சிகள் நம்மை பார்த்து, குடும்ப கட்சி என்று கூறும்போது, எனக்கு கோபம் வருவது கிடையாது. குடும்பம் குடும்பமாக வந்து, குடும்பம் குடும்பமாக துன்பத்தை அனுபவித்து, நாட்டுக்காக உழைப்பவர் இயக்கம்தான் திமுக. மிசா காலத்தில் மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்ற செய்தி வந்தது. அப்போது அதிமுக என்ற பெயரை அஇஅதிமுக என்று மாற்றினர். ஆனால், 75 ஆண்டுகளாக திமுக என்ற பெயர், கொடி, சின்னம், போராட்ட களம் ஆகியவை மாறவில்லை. அதையெல்லாம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

வரலாறு மாற்றம்

நாங்கள் கட்சியில் அடியெடுத்து வைத்த காலத்திலும், நம் இன எதிரிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு பாஜவினர் பொய்களையும் அவதூறுகளையும் பரப்புவது மட்டுமின்றி, அதை எப்படியெல்லாம் உண்மையாக மாற்றலாம் என்று யோசித்து, வரலாறுகளை மாற்றி எழுதுகிறார்கள். அவற்றை உடைத்தெறிய இன்னும் ஏராளமான திருச்சி சிவாக்கள், நாட்டுக்குத் தேவை. இந்த நூல்கள் மாதிரி இன்னும் பல புத்தகங்கள் தேவை. இவ்வாறு அவர் பேசினார். 

+++

BOX

'இந்தியாவே அதிரும் பிடல் காஸ்ட்ரோ– ஸ்டாலின்'

விழாவில் திருச்சி சிவா பேசும்போது, "முதன்முதலாக முதல்வரும், துணைமுதல்வரும் பங்கேற்கும் விழா. இளைஞர் அணி என்ற அமைப்பை கொஞ்சம்கூட சிந்தாமல் சிதறாமல் தம்பி (உதயநிதி) அழைத்துச் செல்கிறார். யாருக்குப் பின்னால் எல்லாரும் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ, அவன்தான் தலைவன். விரும்பப்படுகிறவர்கள், வேடிக்கைக்காக ஆள் சேர்ப்பவர்கள் எல்லாம் தலைவன் அல்ல. அவர் (ஸ்டாலின்) நினைப்பதை செய்யும் முதல் சிப்பாய் நான். அமெரிக்காவே அதிரும் அளவுக்கு சிறிய நாடான கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ இருந்தார். அதுபோல, இன்று இந்தியாவே அதிரும் அளவுக்கு நீங்கள் இருக்கிறீர்கள்" என குறிப்பிட்டார்.

=====

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க