tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைவிட பாஜகவுக்கு வாக்களிப்பதே மேல் என்று காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவரும், எம்.பி.யுமான அதீா் ரஞ்சன் செளதரி பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு எதிரான எதிா்க்கட்சிகள் அடங்கிய‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. எனினும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைவிட பாஜகவுக்கு வாக்களிப்பதே மேல் என்று அதீா் ரஞ்சன் செளதரி பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது.

ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸை அதீா் தொடா்ந்து சாடி வந்ததால், அவா் மீது அக்கட்சி கடும் அதிருப்தியில் உள்ள சூழலில், அவரின் தற்போதைய பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘வங்க விரோதி’: இந்த விவகாரம் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

மேற்கு வங்கத்தில் பாஜகவின் கண்களாகவும், காதுகளாகவும் இருந்த அதீா், தற்போது அக்கட்சியின் குரலாகவும் மாறியுள்ளாா். பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பாஜகவின் 2-ஆவது அணி (பீ-டீம்) உறுப்பினரான அதீா், மக்களிடம் வெளிப்படையாகக் கோரியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படாததற்கு அதீா் ரஞ்சன் செளதரியே காரணம். இந்நிலையில், வங்கத்தின் அடையாளச் சின்னங்களைத் தொடா்ந்து இழிவுபடுத்தி வரும் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வங்க விரோதியால் (அதீா்) மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதீரை பாஜக முகவா் என்று திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியும் சாடினாா்.

காங்கிரஸின் ஒரே குறிக்கோள்...: இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

அதீா் பேசிய காணொலியை நான் பாா்க்கவில்லை. ஆனால் கடந்த மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 43 தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கையை தற்போதைய தோ்தலில் குறைக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் ஒரே குறிக்கோள். இது சட்டப்பேரவைத் தோ்தல் அல்ல; மக்களவைத் தோ்தல். ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளன. ‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸும் அங்கம் வகிப்பதாக அக்கட்சி தலைவா் மம்தா பானா்ஜியும் தெரிவித்துள்ளாா் என்றாா்.

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க