tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 29–
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீபாவளிக்காக 25 படுக்கைகளை கொண்ட 'தீபாவளி தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவை' மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று  துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 
    ஒவ்வொரு ஆண்டும் தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கி வைப்பது என்பது வழக்கம், அந்த வகையில் இன்று தீபாவளி தீக்காய சிறப்பு நோயாளிகள் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  ஆண்களுக்கு 12 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், பெண்களுக்கு 8 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், குழந்தைகளுக்கு ஐந்து படுகைகள் என 25 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்காக பிரத்தியேகமாக தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.
தீக்காய சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.  ஆண்டு தோறும் 2 ஆயிரம் பேர் என்ற அளவுக்கு தீக்காய நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடித்து ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து இருக்கிறது. இந்தாண்டும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசு  மருத்துவமனையிலும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
+++
பட்டாசு வெடிக்கும் போது 'செல்பி' எடுக்காதீர்

பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி அமைச்சர் கூறியதாவது: 
குழந்தைகள்,நோயாளிகள் மற்றும் வயதான முதியவர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
செல்லப் பிராணிகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்த கூடாது.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பிரித்துப் பார்க்கக் கூடாது.
கால் சட்டை பையில் பட்டாசுகளை வெடித்துக்கொண்டு மற்றொரு பட்டாசுகளை வெடிக்க கூடாது.
காலிப்பெட்டிகளை அடுக்கி அதன் அடியில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
சாதாரண குப்பைகளில் பட்டாசுகளை வெடித்து போடக்கூடாது.
பட்டாசுகளை குழந்தைகள், பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே வெடிக்க அறிவுறுத்த வேண்டும்.
குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.
பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளை நீண்ட மத்தாப்பு அல்லது ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
திறந்த காற்றோட்டமான இடத்தில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு, நின்றுகொண்டே  தான் பட்டாசு  வெடிக்க வேண்டும்.
ராக்கெட் போன்ற பட்டாசுகளை நேர்நிலையில் வைத்து தான் வெடிக்க வேண்டும்.
வெடித்த பட்டாசு குச்சிகளை ஒரு மண் நிறைந்த வாளியில் போட வேண்டும்.
பட்டு, நைலான் துணிகள் மற்றும் நீளமான உடைகளை அணிந்துக் கொண்டு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது செல்பி எடுக்க கூடாது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க