tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

திருவனந்தபுரம், நவ. 10–

“ஜமாத் – -இ – -இஸ்­லாமி அமைப்­பின் ஆத­ர­வு­டன், வய­நாடு இடைத்­தேர்­த­லில் 

பிரி­யங்கா போட்­டி­யி­டு­கி­றார்,” என, கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் குற்­றஞ்­சாட்­டி­னார். 

கேர­ளா­வின் வய­நாடு லோக்­சபா தொகு­திக்கு, வரும் 13ல் இடைத்­தேர்­தல் நடக்­கிறது; 23ல் முடி­வு­கள் அறி­விக்­கப்­பட உள்­ளன. இத்­தொ­கு­தி­யில், காங்., சார்­பில் பிரி­யங்கா போட்­டி­யி­டு­கி­றார். 

மும்­முனை போட்டி

இவரை எதிர்த்து மார்க்.கம்யூ., கட்­சி­யின் சத்­யன் மொகேரி, பா.ஜ.,வின் நவ்யா ஹரி­தாஸ் கள­மி­றங்­கு­கின்­ற­னர். இத­னால் வய­நாடு இடைத்­தேர்­த­லில் மும்­முனை போட்டி நில­வு­கிறது.

இந்­நி­லை­யில், மார்க்.கம்யூ., மூத்த தலை­வ­ரும், கேரள முதல்­வ­ரு­மான பின­ராயி விஜ­யன், சமூக வலை­த­ளத்­தில் வெளி­யிட்ட பதிவு:

ஜமாத் – -இ – -இஸ்­லாமி ஆத­ர­வு­டன், வய­நாடு இடைத்­தேர்­த­லில் பிரி­யங்கா போட்­டி­யி­டு­கி­றார். 

இதில் காங்., நிலைப்­பாடு என்ன? ஜன­நா­யக கோட்­பா­டு­க­ளுக்கு எதி­ராக, அந்த அமைப்­பின் சித்­தாந்­தம் உள்­ளது. இது அனை­வ­ரும் அறிந்­ததே. ஜமாத் அமைப்­பி­ன­ருக்கு ஒரே ஒரு கொள்கை தான். ஜன­நா­யக முறை­யி­லான அரசை அவர்­கள் ஏற்க மாட்­டார்­கள். அது­தான் அவர்­க­ளின் சித்­தாந்­தம். ஜமாத் – -இ – -இஸ்­லாமி அமைப்­பின் ஆத­ரவை பெற்­றுள்­ள­தன் வாயி­லாக, மதச்­சார்­பின்மை என்ற காங்­கி­ர­சின் முக­மூடி வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.ஜம்மு – காஷ்­மீ­ரில், பா.ஜ.,வுடன் சேர்ந்து, ஜமாத் – -இ – -இஸ்­லாமி அமைப்பு சதி வேலை­களை செய்­தது. இதற்கு, சமீ­பத்­தில் அங்கு நடந்த சட்­ட­சபை தேர்­தல் சாட்சி.

 மார்க்.கம்யூ., வேட்­பா­ளர் முக­மது யூசுப் தாரி­கா­மியை தோற்­க­டிப்­ப­தில், ஜமாத் – இ – இஸ்­லாமி அமைப்பு கவ­னம் செலுத்­தி­யது; எனி­னும் அவர் வென்­றார். ஜமாத் – இ – இஸ்­லாமி அமைப்­பு­டன், காங்., கூட்­டணி வைத்­துள்­ளது. இதற்­காக அக்­கட்சி சில தியா­கங்­களை செய்­துள்­ளது. மதச்­சார்­பின்­மைக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­வர்­கள், அனைத்து வித­மான மத­வெ­றி­யை­யும் எதிர்க்க வேண்­டாமா? ஜமாத் -– இ – -இஸ்­லா­மி­யின் ஓட்­டு­கள் வேண்­டாம் என, காங்­கி­ர­சால் சொல்ல முடி­யுமா?

இவ்­வாறு அவர் கூறினார். 

ஜமாத் -– இ – -இஸ்­லா­மி­ அமைப்புக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்

மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கியம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தந்தை... மேலும் படிக்க

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப்... மேலும் படிக்க

சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வேகத்தை விட விவேகம் உயர்ந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள். எளிமையான பணிகள் கூட... மேலும் படிக்க

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

இழுபறியாக இருந்துவந்த வந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் புதுவிதவிதமான அனுபவங்கள் ஏற்படும். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய வீடு மற்றும்... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றிகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றிகொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான... மேலும் படிக்க

வியாபார பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு... மேலும் படிக்க