tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை,ஜூலை 31–

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது. அப்போது பணியில் இருந்த அதிகாரிகளின் சொத்து 

விவரங்களை குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு  

சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடியில், 2008ல், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கி சூடு நடந்தது. இதில், 

13 பேர் பலியாகினர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணையத்தின் 

புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில், வழக்கு முடிக்கப்பட்டது.

 

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய 

மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது பணியில் இருந்த காவல், வருவாய் 

துறை மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்து விபரங்களை சேகரிக்க, மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 

உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘காவல், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் 

அவர்களது உறவினர்களின் சொத்து விபரங்கள் சேகரிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்ய, மூன்று மாதம் அவகாசம் 

வழங்க வேண்டும்,’’ என்றார்.

 

அதை ஏற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

 

சொத்து விபரங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். சொத்துக்களை வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்கள் 

குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டியதுள்ளது. எனவே, அந்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் 

செய்ய, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. 

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு, அரசு செயலர், டி.ஜி.பி., 

ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கில், சி.பி.ஐ., விசாரணை என்பது ஏற்கத்தக்கது அல்ல. லஞ்ச 

ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும்.

 

உயிருக்கு பயந்தோடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது. இதுபோல, இதற்கு முன் 

கேள்விபட்டது இல்லை. எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவே வழக்கு 

விசாரணைக்கு ஏற்கப்பட்டது. 

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்கி விட்டு வழக்கை 

முடித்து வைத்தது எப்படி நியாயம்? போலீசார், தங்கள் தவறை உணர வேண்டும்.

 

ஒரு சில ஆண்டுகள் அனுமதியின்றி சம்பந்தப்பட்ட ஆலை இயங்கியுள்ளது. ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில், அரசு 

இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது; இது கவலையளிக்கிறது. 

அந்த தனி நபர்கள் மீது, இப்போதும் 

நடவடிக்கை எடுக்க முடியாது. அனுமதியின்றி ஆலை இயங்கியது அரசுக்கு தெரிந்தும் ஏன் நடவடிக்கை 

எடுக்கவில்லை? 

அப்போது, எல்லாரும் எங்கு இருந்தனர்?

 

இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

 விசாரணையை மூன்று மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க