tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ரோட்டரி கிளப் தலைவர் வெங்கடேசன் நட்டு வைத்தார்

 

தென்காசி ஆக 3

 

தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள் -தமிழக அரசின் திட்டத்தினை தென்காசி நகராட்சி பகுதியில் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பொது இடங்களை தூய்மை செய்தல், கழிவுகளை பிரித்து வழங்குதல் மற்றும் நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை சூழலை பாதுகாக்க அதிக அளவு மரங்களை நடுதல்,மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தென்காசி நகராட்சி வார்டு எண்;1சக்தி நகர் பூங்காவில் 50 மரங்கள் நடப் பட்டன.பல வகையான புங்கன் உள்ளிட்ட நாட்டு மரங்கள் பசுமை தென்காசி தன்னார்வ அமைப்பு முஸ்தபா மூலம் நடப்பட்டன. இந் நிகழ்விற்கு ரோட்டரி குற்றாலம் மெட்ரோவின் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இந்

நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் வசந்தி வெங்கடேஸ்வரன்,

தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், துப்புரவு ஆய்வாளர் ஈஸ்வரன்,ரோட்டரி குற்றாலம் மெட்ரோ செயலாளர் முத்துக்குமாரசாமி முன்னாள் துணை கவர்னர் 

முருகன் ராஜ் மேற்பார்வையாளர் முத்து மாரியப்பன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர் முத்துக்குமார் ஓட்டுநர் கருப்பசாமி, நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்கள் அனைவரும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பல்வேறு நகராட்சி பணிகளில் ஒத்துழைப்பு நல்கவும் நகர் மன்ற தலைவர் சாதிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க