tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தென்காசி அக் 01

 

பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் அரசு நடு நிலை,உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் கணித அறிவையும் மேம்படுத்திட

வானவில் மன்றம் என்ற மன்றத்தினை எங்கும் அறிவியல் யாவும் கணிதம் என்ற அடிப்படை நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தி

வருகிறது. மாநிலம் முழுவதும் 710 கருத்தாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை தமிழ் நாடு அறிவியல் இயக்கம், எய்டு இந்தியா, சுடர், பரிக்சன் போன்ற அமைப்பு மூலம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. 

நமது மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு ஒருவர் வீதம் பத்து பேர் கருத்தாளர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் தென்காசி முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட உதவி திட்ட அலுவலகத்தில் வைத்து நடை பெற்றது உதவித் திட்ட அலுவலர் முகம்மது மீரான் முன்னிலை வகித்தார். அரசு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் வரவேற்றார் . முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்து அனைவருக்கும் அறிவியல் மனப்பான்மை வளர்க்க ஏன்? எதற்கு? எப்படி ? என்றவினாக்களுக்கு விடை காணவும், மாணவர்கள் சிந்தித்து செயல்படவும் , அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி பரிசோதனை களை செய்து காண்பிக்க வேண்டும் என ஆலோசனை கூறி அனைவருக்கும் கையடக்க கணினி வழங்கினார். மதுபாலா பயிற்சி அளித்தார். இம்மன்றம் மூலம் சிறப்பாக பங்குபெற்று புதியன படைக்கும் மாணவர்கள் 25 பேர் கண்டறியப்பட்டு அரசு சார்பில் கல்விச் சுற்றுலாவிற்கு வெளிநாடு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். நிகழ்வில் உயர்நிலைப்பிரிவு நேர்முக உதவியாளர் கண்ணன் , பள்ளித் துணை ஆய்வாளர் சுப்புலட்சுமி ,

தயாளன், சுகந்தி, கனகலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் இலஞ்சி ராம சுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் சுரேஷ் குமார் ஒருங்கிணைத்தார். முடிவில் சங்கீதா நன்றி கூறினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க