tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஜூலை 31 –

"தெளிவான அரசியல் குறித்து பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்," என, தமிழக கவர்னர் ரவி கூறினார். 

மதுரை தியாகராஜர் கல்லூரியில் கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நிறுவனர் தினவிழா, கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு விழா, கல்லுாரி தலைவர் உமா கண்ணன் தலைமையில் நடந்தது. செயலர் கே.தியாகராஜன் வரவேற்றார். 

திருவாசக போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளித்து கவர்னர் ரவி பேசியதாவது:

தமிழகம் தேசிய அளவில் ஆன்மிக பூமியின் தலைநகராக இருந்தது. பக்தி இலக்கியம் மேலோங்கி இருந்தது. மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 1821ல் கல்வி குறித்த ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் பள்ளிகள், கல்லூரிகளில் திருவாசகம் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. பிற மாகாணங்களில் மாநில மொழிக் கொள்கையை தாண்டி ஆங்கிலமும் அதிகமாக வளர்ந்திருந்தது.

ஆனால், 1947க்கு பின் தமிழகத்தில் கல்வியறிவு பெறாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது தான் தேச நலனில் அக்கறை கொண்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் போன்ற, தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள், கல்வி நிறுவனங்களை தொடங்கினர். 75 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த கல்லூரி ஏழைகளுக்கான கல்லுாரியாக இன்றும் செயல்படுகிறது.

சமுதாய வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தியாகராஜர், அழகப்பா, அண்ணாமலை போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாகின. இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன் பெற்றனர். தேச வளர்ச்சிக்கு இதுபோன்ற சிறந்த கல்வி நிறுவனங்களின் பங்கு அதிகம்.

 ஆனால் தற்போது ஒரு பேராசிரியர் 30 கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றுவதாக கணக்கு காட்டும் சம்பவங்களும் நடக்கின்றன.

சுதந்திரத்திற்கு பின் அரசியலால் சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. எனவே தற்போதைய கல்வி முறையில் தெளிவான அரசியல் குறித்து பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். அதற்கேற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க