tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, செப்.1– 

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் 2024–25ம் நிதியாண்டில், சமக்ர சிக்‌ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பதிலளித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியதாவது: 

சமக்ர சிக்‌ஷா அபியானுக்காக கடந்த 2023–24ம் ஆண்டில் ரூ.ஆயிரத்து 876 கோடியே 15 லட்சத்தை தமிழக அரசுக்கு 4 தவணையாக மத்திய அரசு விடுவித்தது. மேலும், 2024–25ம் நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 305 கோடியே 66 லட்சத்தை விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கையின் பலன்கள், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. பிரீ கேஜி முதல் 12ம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் சமக்ர சிக்‌ஷா அபியான் மூலம் தமிழகத்தில் இதுவரை 10 லட்சம் மாணவர்கள் பலனடைந்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் கற்றுத் தருவதை தேசிய கல்வி கொள்கை ஆதரிக்கிறது. பல்வேறு மொழிகளை ஊக்குவிக்கவும், தாய்மொழியில் கல்வி கற்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. 

 தேசிய கல்வி கொள்கை

நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பள்ளிகளை முன்னுதாரண பள்ளிகளாக மாற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடந்த மார்ச்சில் தமிழக அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், பிறகு தமிழக அரசு அனுப்பிய வரைவில், தேசிய கல்வி கொள்கை தொடர்பான சில முக்கியக் கூறுகள் விடுபட்டுள்ளன. பலமுறை நினைவூட்டியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் இன்னும் கையெழுத்திடவில்லை. தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை அமல்படுத்துவதோடு, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடுவதும் அவசியமாகும். இதனால், மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் பலமடங்கு உயரும். 

மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான பல திட்டங்களை அமல்படுத்துவதில் நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. அது தேசிய கல்வி கொள்கை அமலாக்கத்திலும் தொடரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

===

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க