tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூன் 27–

மக்களவை சபாநாயகர் தேர்தலில் பல உறுப்பினர்கள் சீட்டுமூலம் ஓட்டெடுப்பு நடத்தக் கோரியும், தற்காலிக சபாநாயகர் நிராகரித்துவிட்டார். அப்படி நடத்தி இருந்தால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தே குரல் ஓட்டெடுப்பு நடத்தினர் என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

 மக்களவை சபாநாயகர் ஒருமனதாகவே தேர்ந்து எடுக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பேச்சு நடத்தின. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுத்தர கோரினர். ஆனால் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே சபாநாயகர் தேர்தலில் பா.ஜ. வேட்பாளர் ஓம்பிர்லாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். 

  சுமார் 46 ஆண்டுகளுக்கு பின் மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 15 தீர்மானங்களும், கொடிக்குனில் சுரேஷிற்கு ஆதரவாக 3 தீர்மானங்களும் முன்மொழியப்பட்டன. இதனை ஏற்றுக்கொண்ட தற்காலிக சபாநாயகர் குரல் வாக்கெடுப்பின் மூலம் தேர்தலை நடத்தினார். இதில் ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 297 உறுப்பினர்களும், எதிர்க்கட்சி வேட்பாளரான கொடிக்குன்னில் சுரேஷிற்கு 232 உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். அதன்மூலம், ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

 தொடர்ந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு வர அவர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் சபாநாயகர் இருக்கை வரை ஓம் பிர்லாவை அழைத்துச் சென்று, அவரை அமரவைத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். 

குற்றச்சாட்டு

 இது தொடர்பாக திரிணாமுல் காங். உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், " சபாநாயகர் தேர்தலில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கோரினர். ஆனால் தற்காலிக சபாநாயகர் அதை அனுமதிக்கவில்லை. ஆளும் தரப்பில் போதிய எண்ணிக்கை இல்லை என்பதை தெரிந்தே ஓட்டெடுப்பு நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு நடத்தி முடித்தனர். ஒரு உறுப்பினர் கேட்டாலே ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்று விதி உள்ளது. அதை மீறிஉள்ளனர். மக்களவை வீடியோ காட்சிகளை பார்த்தாலே பல உறுப்பினர்கள் ஓட்டெடுப்பு கோரியதை காண முடியும். ஆளும்கட்சிக்கு சாதனமாக சூழல் இல்லை என்பதற்கு இது தெ ளிவான எடுத்துக்காட்டு. போதிய ஆதரவு இல்லாமல் அரசு நடத்துகின்றனர். இது சட்ட விரோதமானது. முறையற்றது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது.அவர்களுக்கு ஏற்கனவே மக்கள் வெ ளியேறும் கதவை திறந்து விட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க