tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, நவ. 15 –

தெலுங்கு சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பான வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து கஸ்தூரியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

சென்னையில் நவ., 3ல் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ வெளியானது. தெலுங்கு சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக, மதுரை திருநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி, கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். நவ., 12ல் விசாரணை நடந்தது.

அப்போது, 'மனுதாரர் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அரசியல் உள்நோக்கத்தோடு, ஒரே சம்பவத்திற்காக தமிழகத்தின் பல இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு: 

ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் மற்றும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, பொது அமைதியை பாதிக்கும் வகையில் பேசியுள்ளார். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் அவரது வீடியோ பதிவு நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை பார்த்த நீதிபதி, 'கல்வியாளர், நடிகை, அரசியல், சமூக செயல்பட்டாளரான மனுதாரர் பொது இடத்தில் இவ்வாறு பேசியது தேவையற்றது. நவ., 14ல் தீர்ப்பளிக்கப்படும்’ என்றார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் பேச்சு, அதை கேட்பவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, தமிழ், தெலுங்கு பேசுபவர்களிடையே வன்முறையை உருவாக்கி, உரிய நேரத்தில் வெடிக்கக்காத்திருக்கும் வெடிகுண்டு போல இருக்கிறது. ஒரு பேச்சாளர் எப்போதுமே பொது மேடையில் குறிப்பாக சமூக ஊடகங்களில் இதுபோன்ற பிரச்னைகளை பேசுவதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில், அந்த கருத்து அனைத்தும் நிரந்தரமாக பதிவாகிறது.மனுதாரர் மேடையில் பேசியது உண்மையில் தெலுங்கு மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. நம்முடைய குரல்களை நன்மைக்காக பயன்படுத்த உறுதி ஏற்போம் என்ற உண்மையை இந்த நீதிமன்றம் வலியுறுத்த விரும்புகிறது.

யாராக இருந்தாலும், வார்த்தைகளை அக்கறையுடனும், கருணையுடனும் கையாள வேண்டும். பிரிவினை, வெறுப்பைக் காட்டிலும், புரிதலையும், இரக்கத்தையும் வளர்க்கும் உரையாடலுக்கு முயற்சிப்போம். இதன்மூலம் பேச்சு சுதந்திரத்தின் உண்மையான சாரத்தை, நாங்கள் மதிக்கிறோம். ஒற்றுமை முன்னேற்றத்திற்கான ஒரு கருவி. இதன் அடிப்படையில் மனுதாரரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
 கைது செய்ய தனிப்படை
முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கஸ்தூரியை கைது செய்ய, மதுரை நகர் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க