tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாகர்கோவில் நவ. 2
வடசேரி பகுதியில் போலீஸ் சீருடை அணிந்து சுற்றி திரிந்த போலி பெண் எஸ். ஐ. சிறையில் அடைக்கப்பட்டார் 
 நாகர்கோவிலில்  பியூட்டி பார்லர் வைத்திருக்கும் ஒருவர்,  வடசேரி போலீசில் அளித்த புகாரில் தனது பியூட்டி பார்லருக்கு சப் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து வந்த ஒருவர் பேசியல் செய்துவிட்டு பணம் கொடுக்கவில்லை என புகார் அளித்தார். 
இதன் அடிப்படையில் வடசேரி போலீசார் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி 
அபி பிரபா (34) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அபிபிரபா கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் (66) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணமான ஆறு வருடங்களுக்கு பின்னர் மாறுபட்ட கருத்து காரணமாக இவர்கள் பிரிந்தனர்.
பின்பு அபி பிரபா சென்னை தி நகரில் உள்ள ஒரு  நிறுவனத்தில் சேலை பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.அப்போது அங்கு பணியாற்றிய சக ஊழியரான பிரித்விராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் திருவனந்தபுரத்தில் ஜவுளி துறையை சேர்ந்த சக ஊழியரின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த பயணத்தின் போது ரயிலில் பயணித்த பரமார்த்தலிங்கபுரம் பள்ளிவிளையை சேர்ந்த சிவா என்ற நபரிடம் அபி பிரபாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. 
பின்னர் அபி பிரபா சிவாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். 
காவல்துறையில் பணிபுரிபவரை மட்டுமே எனது தனது பெற்றோர்
 திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக சிவா அபி பிரபாவிடம் கூறியுள்ளார்.
இதனால் அபி பிரபா தனது நண்பரான பிரித்விராஜ் மூலமாக  போலீஸ் சீருடை எடுத்து  சென்னை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீஸ் சீருடையில் எடுத்துள்ளார். 
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிவா தனது பெற்றோரிடம் காண்பித்து அவர்களிடம் சம்மதம் பெற்றார். 
கடந்த 28.10.2024 அன்று நாகர்கோவில் டபிள்யூ சிசி அருகே உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்று அங்கு பேசியல் செய்து கொண்ட அபி பிரபா தான் வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாக கூறி பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். 
இதேபோன்று 31.10.2024  மீண்டும் அந்த பியூட்டி பார்லருக்கு பேசியல் செய்ய சென்றுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த  பார்லர் உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அங்கு விரைந்து வந்த போலீசார் அபி பிரபாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் கைப்பற்றினர். அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க