tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஆக 17-

சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு மற்றும் கொலைகள் குறித்த விசாரணையில் போலீசாரின் செயல்பாடுகள் வருத்தம் தருவதாக உள்ளது என சென்னை ஐகோர்ட் கடுமையாக விமர்சித்துள்ளது.

நிலஅபகரிப்பு வழக்குகளை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர் என கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என அதிருப்தி தெரிவித்த சென்னை ஐகோர்ட், ஒரு நிலஅபகரிப்பு வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. 

சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நிலத்தை ஒருவர் அபகரித்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், நிலத்தை மீட்டு தரக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

 மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி. ராகவாச்சாரி, இந்த விவகாரத்தில் முழுக்க, முழுக்க போலீசார், ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதைகேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

 நிலம் மனுதாரருக்கு (கார்த்திக்) சொந்தமானது என்பதற்கான அனைத்து முகாந்திரமும் இருப்பது தெரிந்தும் போலீஸார் கண்களை மூடிக்கொண்டு நிலத்தை அபகரிக்க உதவியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.  

ரவுடிகளுடன் போலீசார் கைகோர்த்துக் கொண்டு உண்மையான நில உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் ஐகோர்ட்டுக்கு வழக்குகள் வருவது அதிகரித்துள்ளது. இது வேதனையாக உள்ளது. 

அரசியல்வாதிகளும் இதுபோன்ற நிலமோசடி வழக்குகளில் சம்பந்தப்படுவது இந்த விவகாரங்களை மேலும் மோசமாக்குகிறது. இதுபோன்ற வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் விருப்பு, வெறுப்பின்றி விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவது வேதனையாக உள்ளது.. 

இதுபோன்ற நிலைமை தொடர்ந்தால் அப்பாவி பொதுமக்களுக்கு போலீஸ் துறை மீதான நம்பிக்கை குலைந்து விடும். இது நில மாபியாக்களையும், ரவுடிகளையும் ஊக்குவிப்பது போலாகி விடும்.

இது போன்ற விவகாரங்களில் கோர்ட் மவுனம் காக்க முடியாது , சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழ்ந்த நில அபகரிப்பு தொடர்பான கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீஸார் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை கோர்ட் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 

மனுதாரர் கார்த்திக் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன். சிபிஐ சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் 

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

===========

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க