tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூன் 13

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை இன்று தெரிவித்துள்ளது.

மறுதேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என்றும், 30ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 1,500க்கும் அதிகமான தேர்வர்களுக்கு அந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியது.

தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இதை எதிர்த்து 20 ஆயிரம் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று பிசிக்ஸ் வாலா என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

23 ந்தேதி மறுதேர்வு

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறும்போது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவை திரும்ப பெறுகிறோம்.அந்த மாணவர்களுக்கு ஜூன் 23-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 30-ந்தேதி அறிவிக்கப்படும்.தேர்வு எழுத விரும்புவோர் எழுதலாம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இதர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 6-ந்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீட் மறுதேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர். தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது. மேலும் கலந்தாய்வு பாதிக்கப்படாதவாறு நீட் மறுதேர்வு விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். கருணை மதிப்பெண்களை தவிர்க்க மனுதாரர்கள் எழுப்பியுள்ள பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நீட் தேர்வு குளறுபடி, வினாத்தாள் கசிவு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனு உள்பட நீட் தொடர்பாக அனைத்து மனுக்களும் ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, நீட் தேர்வு குளறுபடியை சுட்டிக்காட்டியும், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது.

வினாத்தாள் கசிந்ததற்கான

ஆதாரம் இல்லை

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

“தேசிய தேர்வு முகமை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அது மிகவும் நம்பகமான அமைப்பாகும். நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க