tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 29–

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் விலக்கு கோரிய சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 தீர்மானத்தை முன் வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவதுபு

 மருத்துவத்துறையிலும், பல்வேறு சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துக்கல்வியின் மாணவர் சேர்க்கை முறைதான் இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூக நீதியையும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த முறையால்தான் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கிடவும் முடிந்தது.

எட்டாக்கனி

ஆனால், 2017 ம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய பிறகு இந்த நிலை முற்றிலுமாக மாறி ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பதென்பது எட்டா கனியாகி விட்டது. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதனை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்து வருகிறோம்.

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக்கல்வியை அவசியமற்றதாக மாற்றும், மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையையும் மாநில அரசுகளிடம் இருந்து பிரிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியிலும், மாணவர்கள் பெறும் 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவ சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்த சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்.

திருத்தங்கள்

தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழி வகுத்து வரும் இந்த தேர்வு முறையை பல மாநிலங்கள் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது'.

இவ்வாறு அவர் பேசினார்.

 அதனை தொடர்ந்து நீட் விலக்கு குறித்து பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர். அதனை தொடர்ந்து பேரவை தலைவர் '' முதலமைச்சரின் தனி தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது'' எனக்கூற உறுப்பினர்கள் வாய்மொழியாக அதனை ஏற்றனர். பின்னர் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

==

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க