tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 23–

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி:

 காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த தொண்டர்களுடன் தொண்டர்களாக பணியாற்றி வருகிறோம். 90 விழுக்காடு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி உள்ளோம்.

நீட் தேர்வு

 நீட் தேர்வு முறைகேட்டில் பல இடங்களில் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வில் காங்கிரஸ் செய்த குளறுபடிகளை சரிசெய்வதாக கூறி வருகிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை அவர் கூறி வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு வரவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில்தான் நீட் தேர்வு வருகிறது. பாஜ உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என பொய் பரப்பும் வேலையை செய்து வருகிறது. இதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆர்.எஸ்.எஸ்.வழி

பாஜ தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ்.தான் நிர்வகித்து வழிநடத்துகிறது. மத்திய அரசை ஆட்சி நடத்துவது ஆர்.எஸ்.எஸ்.தான். பிரதமர் மோடி அதன் முகமாகவே உள்ளார். அம்பேத்கர் கடைசிவரை காங்கிரஸ் கட்சி உடன் மட்டுமே பயணித்தார். காங்கிரஸ் உடன்தான் அவரது பயணம் இருந்தது. பெரிய சமூகம் எனக்கூறியவர்கள் அம்பேத்கரின் கீழ் பணியாற்றினார்கள். இந்த சமூக கட்டமைப்பை காங்கிரஸ் கட்சியால்தான் செயல்படுத்த முடியும். இதனை ஆர்.எஸ்.எஸ், பாஜ வால் செய்ய முடியாது. அரசியலமைப்புபடி எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கென்று சட்ட உரிமை உள்ளது. விகிதாச்சார உரிமைகளின் படி இடஒதுக்கீடு உள்ளது. அவருக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்து எந்த விதிமுறைகளும் இல்லை. காங்கிரஸ் கட்சிதான் முக்கிய துறைகளை தலித் தலைவர்களுக்கு அளித்துள்ளது.  

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கும். உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கக்கூடாது என தீர்மானிக்க எச்.ராஜா யார்? திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும். எச்.ராஜா இதனை கூறுவதற்கு யார், அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? அரசியலமைப்புப்படி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுத்தால், முதலமைச்சரின் முடிவுப்படி அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பாஜவிற்கு மத அரசியல் செய்வதுதான் நோக்கம். மக்கள் குறித்து பாஜ பேசுவது இல்லை. தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பார்ப்பதுதான் எச்.ராஜாவின் வேலை. 

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க