tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

நாகர்கோவில், நவ. 14–

 

நாகர்கோவில் அடுத்த ஆளூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த நெல்லை இன்ஜி. பட்டதாரியான பெயின்டர் உடல் கருகி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் வானுமலை. இவரது மனைவி வீரலெட்சுமி. தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் செல்வ சதீஷ்(26). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு பெயின்டராக வேலை செய்து வந்தார். இவர், அஞ்சுகிராமம் கனகப்பபுரம் பகுதியை சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பிஜுசாலமனிடம் வேலை செய்து வந்தார். 

வாடகை வீடு

இதற்காக செல்வ சதீஷ் சக தொழிலாளர்கள் இருவருடன் நாகர்கோவில் அடுத்த ஆளூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் (12ம் தேதி) இரவு மூவரும் பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில், மது போதையில் இருந்த செல்வ சதீஷ் மட்டும் வீட்டின் மாடி அறையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கினார். . மற்ற இருவரும் கீழ்தளத்தில் அறைக்கு வெளியே படுத்து தூங்கினர். 

தூங்கும் போது செல்போன் சார்ஜ்

செல்வ சதீஷ் தனது செல்போனை தலகாணிக்கு அருகே வைத்து சார்ஜ் போட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை செல்வ சதீஷ் அறையை விட்டு வெளியே வராததால் அவருடன் தங்கியிருந்த சக தொழிலாளி வெங்கடேஷ் என்பவர் அறைக்கு சென்று பார்த்த போது செல்வ சதீஷ் தரையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அருகில் அவரது செல்போன் வெடித்து எரிந்த நிலையிலும், கட்டிலில் மெத்தை எரிந்து நாசமான நிலையிலும் கிடந்தது. 

தடயவியல் சோதனை

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டதில், செல்போன் வெடித்த அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த செல்வ சதீஷ், பின்னர் தலகாணி, மெத்தையில் பற்றி எரிந்த தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து இரணியல் போலீசில், செல்வ சதீஷின் சித்தப்பா மகன் ஜெபஸ்டின் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகிறார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க