tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

டெல்லி, ஜூன் 7

பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.30 லட்சம் கோடி, பொது மக்களுக்கு செயற்கையாக இழப்பு ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்த ஊழல்வாதிகள் யார் என்பது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போதே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 400 இடங்களை வெல்லும். அதன்பிறகு பங்குச்சந்தை ஏற்றம் காணும். எனவே பங்குகளை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்’ என்றார். அதேபோல், மே 19-ம் தேதி பிரதமர் மோடி, `ஜூன் 4-ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) பங்குச்சந்தை புதிய உச்சம் தொடும்’ எனக் கூறினார்.

ரூ.30 லட்சம் கோடி இழப்பு

அதற்கேற்றவாறே, ஜூன் 1-ந்தேதி ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக கூட்டணி 360 இல் இருந்து 400 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்க, அடுத்தநாளே இந்திய பங்குச்சந்தை புள்ளிகள் திடீரென புதிய உச்சம் தொட்டது. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் குறியீடு 2,622 புள்ளிகள் (3.5 சதவீதம்) அளவுக்கு உயர்ந்து, 76,583 புள்ளிகளாக உயர்ந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 807 புள்ளிகள் வரை உயர்ந்து, 23,337 புள்ளிகளாக உயர்ந்தது. இந்த உயர்வு இதுவரையில் இல்லாதது என்று கூறப்பட்டது.

ஆனால், ஜூன் 4 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக கூட்டணி மொத்தமாகவே 293 இடங்களை மட்டுமே பெற, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4,389 புள்ளிகள் குறைந்து 72,079 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1,379 புள்ளிகள் குறைந்து 21,884 புள்ளிகளாகவும் வர்த்தகம் சரிவைக் கண்டது. இதன்மூலம், 425.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மூலதனம் ஒரே நாளில் 395.99 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ந்தது. முதலீட்டாளர்கள் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தனர்.

கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்

பின்னர், பா.ஜ.க வேண்டுமென்றே கருத்துக்கணிப்பை இவ்வாறு வெளியிடவைத்து பங்குச்சந்தையில் சதிசெய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே, தேர்தல் முடிவுகள் அன்று முதலீட்டாளர்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்குப் பின்னணியில் கருத்துக்கணிப்பு மோசடி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறும் செபி (SEBI) தலைவர் மதாபி பூரி புச்சிக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த ராகுல் காந்தி, “பங்குச்சந்தை உச்சம் தொடும் என மோடியும், அமித் ஷாவும் அறிவுரை வழங்குகிறார்கள். இதுவொரு கிரிமினல் குற்றம். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்படி 5 கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் ஆலோசனைகளை வழங்கினர்? முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதுதான் அவர்களின் வேலையா? பொய்யான கருத்துக்கணிப்பு வெளியானதும், ஜூன் 3-ம் தேதி பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டுகிறது.

பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான ஜூன் 4-ம் கடும் சரிவைக் காண்கிறது. இதனால், 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 5 கோடி குடும்பங்களை ஏமாற்றி பெரும் லாபம் சம்பாதித்த பாஜகவுக்கும், போலியான கருத்துக் கணிப்பாளர்களுக்கும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு? இது இதுவரை இல்லாத மிகப் பெரிய பங்குச் சந்தை மோசடி. இது ஒரு மாபெரும் பங்குச்சந்தை ஊழல். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கோடிகளைச் சம்பாதித்தவர்கள் யார்..? இந்த ஊழலை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க