tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

புதுடெல்லி, அக். 26-

இந்தியாவில் 6 முதல் 23 மாத வரையிலான குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பா. ஜ., மாநிலங்கள்
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய  பா. ஜ., ஆளும்  மாநிலங்களில் இந்த அளவு 80 சதவீதத்துக்கு மேலாகவும் சிக்கிம், மேகாலயா ஆகிய 2 வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கு குறைவாகவும் பதிவாகியுள்ளது.
குழந்தைகளுக்கு தரப்படும் உணவின் தரத்தை மதிப்பிடுவதற்கு குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை (எம்டிடி) புள்ளிகளைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

 தாய்ப்பால், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்பட ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வகைகளில் உணவளிக்க உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

    இந்தியாவில் இதன் தாக்கத்தைக் கண்டறிய கடந்த 2005–-06-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட 3-ஆவது தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வுடன் (என்எஃப்எச்எஸ்) 2019-– 21-ம் ஆண்டின் 5-வது தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வின் தரவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதன் 
 முடிவுகள் இந்திய தேசிய மருத்துவ இதழில் ஆய்வறிக்கையாக வெளியாகியுள்ளது.
இந்தியாவில் குறைந்தபட்ச உணவுப் பன்முகத்தன்மை தோல்வியின் விகிதம் 2019-–21-ஆம் ஆண்டில் 75 சதவீதத்துக்கு மேல் உள்ளது. 2005-–06-ம் ஆண்டின் 87.4 சதவீதத்தில் இருந்து விகிதம் குறைந்திருந்தாலும் உலக சுகாதார அமைப்பின் தரநிலையில் இது தோல்வியாகும்.

    அதேபோல, 2005-–06 மற்றும் 2019–-21-ம் ஆண்டு தரவுகளை ஒப்பிட்டு, புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல்வேறு உணவுக் குழுக்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

    முட்டை பயன்பாடு

முட்டைகளின் நுகர்வு  17 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. 
பருப்பு வகைகளின் நுகர்வு  14 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளது .
‘வைட்டமின் ஏ’ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகா்வு 7.3 சதவீதமும், பிற பழங்கள் மற்றும் காய்கறிகளின் நுகர்வு 13 சதவீதமும் இறைச்சி நுகர்வு 4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
 அதேசமயம், தாய்ப்பால் நுகர்வு 87 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாகவும் பால்பொருள்களின் நுகர்வு 54 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
    
கிராமப்புறங்களில் வசிக்கும் கல்வியறிவு இல்லாத மற்றும் தாய்மார்களின் குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளும்தான் சரிவிகித உணவை சாப்பிடுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உணவில் போதிய ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த மேம்படுத்தப்பட்ட பொது விநியோக முறை, தீவிரப்படுத்தப்பட்ட (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் (ஐசிடிஎஸ்)’ திட்டம், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஊட்டச்சத்து ஆலோசனை உள்ளிட்ட விரிவான அணுகுமுறையை அரசு பின்பற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க