tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவை, ஜூலை 28–

கோவை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி, மத்திய பட்ஜெட் பற்றிய தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவி ஓடினார்.

 பா.ம.க. தலைவர் அன்புமணி நேற்று கோவை வந்தார் .விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டினார். கொங்கு மண்டலம் என்றாலே தமிழ்நாட்டிற்கு தொழில் வளம் கொழிக்கும் இடம். தற்பொது மின்சார கட்டணம் உட்பட பல்வேறு காரணங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள 7.5 கோடி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்டணத்தை திரும்பப் பெறவில்லை எனில் தொழிலே செய்யமுடியாத நிலை ஏற்படும்.கோவை மேயர் ராஜினாமா செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அத்திக்கடவு– அவினாசி திட்டம் எப்போது வரும்? அதில் என்ன பிரச்சினை இருக்கின்றது.தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு பொய் பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

 மத்திய பட்ஜெட் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, " 48 லட்சம் கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் வராதா? கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ரூ.6,500 கோடி தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் கொடுத்துள்ளனர். தமிழகத்தின் பெயர் சொல்லவில்லை என்பது பிரச்சினையா? 3.5 லட்சம் கோடி பட்ஜெட் போடும் தமிழக அரசு, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி உங்களுக்கு ஒதுக்க முடியாதா?" என்று எதிர்கேள்வி விடுத்தார்.

  தொடர்ச்சியாக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆவேசமடைந்த அவர், இரு கைகளை கும்பிட்டு "அப்பா சாமி ஆளை விடுங்க. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி கோவை வருகிறார். அவரிடம் பட்ஜெட் தொடர்பான இந்த கேள்விகளை கேளுங்கள் என்று நழுவினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க