tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்தால் தானே அருவாள் உருவாகும். சோதனையும், துன்பங்களும் அப்படியே. அவர்கள் பணத்தாசையும், பெண்ணாசையும் பிடித்து அலைந்து தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்கிறார்கள், நீ வா உனக்கு மட்டுமாவது உண்மை என்னவென்று புரியவைக்கிறேன் என்று சொல்கின்றான் சிவன். சுவையென்பது வாய் வரைக்கும் தானே தொண்டையைத் தாண்டிவிட்டால் என கொக்கி போடுகிறான். இன்னாருக்கு இன்ன இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பது யாருக்காவது முன்கூட்டியே தெரியுமா என்ன? பணத்தின் மூலமாக உடலை விலைபேசலாம் மனதை அடிமையாக்க முடியுமா? உடலும் ஓரிரவு மட்டும் தானே உனக்கு வாடகை அடுத்த வாடிக்கையாளர் கையில் பணத்தோடு காத்திருப்பான் அல்லவா? நல்லதை கடைவிரிப்பவர்கள் கொள்வாரில்லை என புலம்பத்தான் வேண்டியிருக்கிறது. காலப்போக்கில் பெண், பொன், மண் திகட்ட ஆரம்பிக்கிறது இதுநாள் வரை நீ சக்கரைப் பாகுவைத்தான் தேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாய். பேரானந்தக் கடலில் அலையில் மட்டுமே நீ கால்நனைத்தாய். மீனுக்கு தான் கடலில் இருக்கிறோம் என்ற தன்னுணர்வு வருமா? நீ கனவு காண்கிறாய் என்பது விழித்த பிறகு தானே உனக்குத் தெரிகிறது. வாழ்க்கையும் சொப்பனம் தான். சோதனையும், கஷ்டங்களும் உனக்கு அடிமேல் அடி கொடுத்து விழித்துக்கொள் விழித்துக்கொள் என்கிறது.

 

எது இங்கு நிலையானது அதைக் கண்டுபிடி. பெண்ணாசைக்கு நீ ஆட்பட்டாயேயானால் செக்குமாடு மாதிரி இங்கேயே சுற்றிச் சுற்றி வர வேண்டியதுதான். மணணாசையால் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு மீதி நாட்களை சிறைச்சாலையில் கழிக்க வேண்டியது தான். நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உனக்கு ஒருபாடம் ஆனால் நீ அதை புரிந்து கொள்ள மாட்டாய். இது அறிவியல் யுகமாக இருக்கலாம் ஆனாலும் வாய் வழியாகத்தானே உண்கிறோம், நாசி வழியாகத்தானே சுவாசிக்கிறோம். எப்படி நாணயத்துக்கு இருபக்கம் உள்ளதோ அதே போல் வாழ்க்கைக்கு மறுபக்கம் உள்ளது. மரணம் அதைத் தெரியப்படுத்தும். அணை போட்டுத் தடுத்தாலும் நதி கடலை நாடத்தானே செய்கிறது.

 

எத்தனையோ கோடி பேர்களில் ஒருசிலர் தானே உலகத்தைத் துறக்கிறார்கள். சந்நியாசி உலகத்தைத் துறந்தவன் மட்டுமல்ல உலகத்தைப் பொறுத்தவரை அவன் இறந்தவன். உன் நடைமுறை வாழ்க்கையை நேர்படுத்திக் கொள்ளாமல் கடவுள் அருவமா, உருவமா என்று வாதிடுவதில் என்ன பயன். எத்தனை பிறவிகளாக வணங்குவதையே தொழிலாகக் கொண்டிருப்பாய் அவனை நோக்கி ஒருஅடி எடுத்து வைக்க வேண்டாமா? இந்து மதத்தில் இத்தனை தெய்வங்கள் எதற்கு என்கிறாய்? தாயானவள் குடும்பத்திலுள்ளவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி விதவிதமாக சமைக்க வேண்டியுள்ளதே. முருக பக்தியில் ஆட்பட்டுப் போனால் கந்தா என்றவுடன் கண்களில் கண்ணீர் வர வேண்டாமா? வாழ்வை ஒழுங்காக வாழ்ந்திருந்தால் மரணத்தைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். அம்மா என்ற சொல் உன் அம்மாவை மட்டுமா குறிக்கிறது. கடவுள் மனிதனாக இறங்குவதைப் போல மனிதன் கடவுளாக ஏற்றம் பெறும்வரை இந்த சொக்கட்டான் விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 

காவிரிபூம்பட்டினத்தில் திருவெண்காடர் பெரும் செல்வந்தர். ஆள்வதற்கு ராஜ்ஜியமிருந்தும் ஒரு வாரிசில்லையே என்ற ஏக்கம் அவருக்கிருந்தது. திருவிடைமருதூர் ஈசனிடம் வரமருள வேண்டிக் கொண்டார். நடப்பது எதுகுறித்து என்று மனிதனால் உணர்ந்து கொள்ள முடியுமா என்ன? அன்றிரவு திருவிடைமருதூரில் வசிக்கும் இருக்கின்ற செல்வத்தையெல்லாம் சிவகாரியங்களில் இழந்த ஆதிசைவர் கனவில் தோன்றி நான் தீர்த்தங்கரை வில்வ மரத்தடியில் ஒரு ஆண் குழந்தையாக தவழ்கிறேன் என்னை திருவெண்காடர் தேடி வருவார் அவரிடம் ஒப்படைத்து விட்டு எனது எடைக்கு எடை தங்கம் தருவார் பெற்றுக் கொள், உன் பீடை ஒழியும் என்றார். அதே நேரம் திருவெண்காடர் கனவில் தோன்றி ஆதிசைவர் குழந்தை தருவார் பெற்றுக் கொண்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்துவிடுமாறு கூறி இருந்தார்.

 

திருவெண்காடர் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். அவர் உள்ளம் குளிர்ந்தது. சிவனருட்செல்வனாதலால் மருதவாணன் என அவனுக்கு பெயரிட்டார். சிவகலை அம்மாள் குழந்தையின் கால் மண்ணில் பாவாமல் சீராட்டி வளர்த்தாள். காலம் மிகவும் புதிரானது எப்போது காலை வாரிவிட்டுச் சிரிக்கும் எனத் தெரியாது. மருதவாணன் வாலிப பருவத்தை எட்டினான். தந்தையின் முதுமை காரணமாக அவருக்கு ஓய்வளித்துவிட்டு மரக்கலத்தில் வாணிபத்திற்கு தானே புறப்பட்டுச் சென்றான். திருவெண்காடரும், சிவகலையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மருதவாணன் பொற்குவியலோடு வருவான் என்று திருவெண்காடர் காத்திருந்தார். எவ்வளவு செல்வந்தராக இருந்தும் திருவெண்காடருக்கு பணப்பித்து இருந்தது. அன்று காலை மருதவாணன் திரும்பிவிட்டதாகவும் மரக்கலம் முழுவதும் எருமூட்டைகளும், தவிட்டு மூட்டைகளும் இருப்பதாகவும் வேலையாட்கள் வந்து திருவெண்காடரிம் தகவலை தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

 

மருதவாணன் என்ன காரியம் செய்து வந்திருக்கிறான் பார்ப்போம் என்று திருவெண்காடர் துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். கோபாவேசத்துடன் வரட்டியொன்றை அவர் தூக்கி வீசியெறிய அதிலிருந்து மாணிக்கப்பரல்களும், நவரத்தினங்களும் சிதறி ஓடின. தவிட்டு மூட்டையைக் கொட்டிப் பார்க்க அனைத்தும் பொற்குவியல்கள். திருவெண்காடர் என்ன தான் இருந்தாலும் என் வளர்ப்பு அல்லவா என பெருமிதம் கொண்டார். மருதவாணனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். திருவெண்காடர் மருதவாணனைக் காண வீட்டிற்கு ஓடிச் சென்றார். விஷயத்தைக் கூறாமல் சிவகலையிடம் பிள்ளையைப் பற்றிக் கேட்க அவன் இந்தப் பெட்டியை உங்களிடம் தரச் சொன்னான் இங்கேதான் எங்கேயாவது ஒளிந்திருப்பான் என்றாள் சிவகலை. திருவெண்காடர் பட்டுத்துணியை அவிழ்த்து பெட்டியைத் திறந்து பார்த்தார். அதில் ஊசியும், ஓலைச்சுருளும் இருந்தது. திருவெண்காடர் ஓலைச்சுருளை எடுத்துப் படிக்க அதில் காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. சிவனுக்கு முருகன் ஞானாவுபதேசம் செய்தது போல திருவெண்காடருக்கு யாரும் சொல்லிக் கொடுக்காததை மருதவாணன் சொல்லிக் கொடுத்துவிட்டான்.

 

திருவெண்காடராக வீட்டினுள் சென்றவர், கெளபீனத்துடன் பட்டினத்தாராக வீதியில் இறங்கினார். மருதவாணா பணத்துக்கு அப்புறம்தான் பந்தபாசம் என்று வைத்திருந்தேன் அல்லவா எனக்கு சிறந்த பாடம் புகட்டி விட்டாய். மாயையைப் பிடித்து உழன்று கொண்டிருந்த எனக்கு உண்மை பிடிபட்டுவிட்டது. காவிரிபூம்பட்டினம் அவரது கோலத்தைப் பார்த்து எள்ளி நகைத்தது. பட்டினத்தடிகள் நினைத்துக் கொண்டார் தான் எதை இழந்தேன் எதைப் பெற்றான் என்று ஈசனுக்குத் தெரியும் இவர்களுக்கென்ன என்று. இறந்தன பிறக்கும் பிறந்தன இறக்கும் எனச் சொல்லிக் கொண்டே ராஜவீதியில் திருவோட்டினை ஏந்திச் சென்றார். அவரது பாடல்களைக் கேட்கும் பொருட்டே ஈசன் நுனிக்கரும்பு இனிக்கும் வரை அவரை நடக்கவைத்தான்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க