tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 11–

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 165 கோடியை வழங்குவோம் என்று மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பேசினார்கள். அதன் விவரம்:

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:

மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தமிழக அரசு நிதி வழங்கியது. அதுபோல ஆசிரியர்களுக்கும், அமைச்சுப் பணியாளர்களுக்கும் இந்த அரசு நிதி வழங்கும். 

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு:

தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க மறுக்கும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன்:

மத்திய அரசு நிர்ப்பந்தத்தால் தமிழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட முடியாது. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. சம்பளம் வழங்காமல் பட்டினி போட்டாலும் ஒருபோதும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம். 

இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்:

பிரமருக்கு குடும்பம் கிடையாது. முதல்வருக்கு குடும்பம் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் அனுபவிக்கும் துன்பம் முதல்வருக்கு தெரிகிறது. தேசிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழகத்தை நிர்பந்திக்கிறார்கள். இவ்வாறு இந்தியை திணிக்கும் முயற்சி தொடர்ந்தால் 1965ம் ஆண்டு போராட்டம் மீண்டும் திரும்பும்.

விசிக தலைவர் திருமாவளவன்:

கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மாநில அரசின் கருத்தை ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாததால் நிதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. 

இவ்வாறு அவர்கள் பேசினர்.

==

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க