tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஆக. 2 -

திருச்சி உய்ய கொண்டான் திருமலையைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு :

 நாம் தமிழர் கட்சியில் நான் மாநில பொறுப்பில் இருந்து வருகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக, நான் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது அவதூறான கருத்துக்களையும் பட்டியல் இனத்தவருக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்ததாக என் மீது திருச்சி மாவட்ட போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் ஜாமீன் பெற வேண்டும் என்பதால், கீழ்கோர்ட்டில் எனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேணடும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘மனுதாரர் பட்டியல் இனத்தவருக்கு எதிராக பொதுமேடையில் பேசியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் இதேபோல் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசிவருகிறார். ஏற்கனவே இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜாமின் பெறும்போது இதுபோன்று அவதூறான கருத்துக்களை பேசமாட்டேன் என ஐகோர்ட்டில் உத்தரவாத பத்திரம் வழங்கி ஜாமீன் பெற்றுள்ளார். இப்போது உத்திரவாத பத்திரத்தை மீறி, தொடர்ந்து பொதுவெளிகளிலும் பொது மேடைகளிலும் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே, இந்த வழக்கில் மனுதாரருக்கு நிவாரணம் வழங்கக்கூடாது’’ என்றார்.

தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

மனுதாரர் ஏற்கனவே தமிழக முதல்வர் தொடர்பாக அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், இதுபோன்ற கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்க மாட்டேன் என உத்திரவாத பத்திரமும் அளித்ததால், அவறுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் மனுதாரர், பட்டியல் இனத்தவருக்கு எதிரான கருத்துக்களை பேசி, தன் யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் உள்ளவர், இதுபோன்று பேசினால் மக்கள் மத்தியில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது மனுதாரருக்கு தெரியாதா?

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை நாகரீகமான முறையில்தான் எதிர்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதை யூடியூப்பில் பதிவேற்றம் செய்தால் அதற்கு பார்வையாளரும் கூடுகிறது பணமும் குவிகிறது.

யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளார். பேச்சு சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதனை வரம்பு மீறி பயன்படுத்தக்கூடாது. அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. எனவே மனுதாரர் இனிமேல் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் அவதுாறான கருத்துக்களை தெரிவிக்கமாட்டேன் என அதை சமூக வலைதளங்களில் பதிவிடமாட்டேன் என்றும், மீண்டும் கோர்ட்டில் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்த பின்னர், கீழ் கோர்ட்டில் மனுதாரர் ஆஜராகி, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 

நீதிபதி உத்தரவை ஏற்று, சாட்டை துரைமுருகன், உத்திரவாதப் பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க