tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 2௧– 

 

‘‘தி.மு.க.,வும் – பா.ஜ.,வும், சிந்தாந்த அடிப்படையில் எதிரும், புதிராக பயணித்து வருகின்றன. ஆனால் ஜாதி ஆதிக்க 

வெறி இருப்பதால் தான், பழனிசாமி ரகசிய உறவு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார் என்று தமிழக பா.ஜ., தலைவர் 

அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இது குறித்து அண்ணாமலை 

சென்னையில் அளித்த பேட்டி:

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, அரசு சார்பில் நாணயம் வெளியிட, மத்திய அரசிடம் தி.மு.க., அரசு அனுமதி 

பெற்றது. தி.மு.க., அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். கட்சியின் 

மூத்த தலைவரை, மாநில தலைவரான நான் வரவேற்பது கடமை. இதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அரசியல் 

கலந்து பேசுவது, வேதனைக்கு உரியது.

அதே மரியாதை

 

கடந்த, 2017ல் அ.தி.மு.க.,வும் – பா.ஜ.,வும் கூட்டணியில் இல்லை. அப்போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., 

கோரிக்கையை ஏற்று, எம்.ஜி.ஆருக்கு, சிறப்பு நாணயம் வெளியிட்டது மத்திய அரசு. பா.ஜ., ஆட்சியில் இருக்கும் போது, 

எம்.ஜி.ஆருக்கு என்ன மரியாதை செய்ததோ, அதை மரியாதை தான் கருணாநிதிக்கும் செய்துள்ளது. 

 

இதில், பா.ஜ., அரசியலை கலக்கவில்லை. அரசியல் நாகரிகம் என்ன என்பதை, பா.ஜ., முழுதுமாக உணர்ந்துள்ளது. 

தி.மு.க.,வும் – பா.ஜ.,வும் சிந்தாந்த அடிப்படையில் எதிரும், புதிராக பயணித்து வரும் கட்சிகள். 

 

ரகசிய உறவு என்று கூறும் பழனிசாமி, எதற்காக பா.ஜ., உடன் கூட்டணியில் இருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அரசியல், லாப நஷ்ட காரணங்களுக்காக குறை கூறுவது நாகரிகமற்றது. நாளை ஜெயலலிதாவுக்கு விழா எடுக்க 

விரும்பினாலும், அதை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு செய்யும். 

ஜாதி ஆதிக்க வெறி

 

தி.மு.க.,வை எதிர்த்து பேசுவது பா.ஜ., தான். என் மீது தான், தி.மு.க., அதிக வழக்குகளை பதிவு செய்துள்ளது; தி.மு.க., 

அரசுக்கு எதிராக பா.ஜ., மட்டுமே அதிக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. சட்டசபையில் கருணாநிதிக்கு படம் திறக்கும் 

விழாவிலும் நான் பங்கேற்றேன்.

 

முதல்வருக்கும், கவர்னருக்கும் சமரசம் செய்வது என் வேலையல்ல. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தர 

வேண்டிய மரியாதையை, பா.ஜ., தந்துள்ளது. பா.ஜ, தொடக்கூடாத கட்சியா, கண்ணில் பார்க்க கூடாத கட்சியா? ஜாதி 

ஆதிக்க வெறி இருப்பதால் தான், பழனிசாமி ரகசிய உறவு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

 

தி.மு.க.,வோ, கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவிற்கு, ராஜ்நாத் சிங்கை அழைத்து, அந்த செய்தியை டில்லி வரை 

கொண்டு சென்றது. ‘நானே நாணயத்தை வெளியிடுகிறேன்’ என்று கூறி, எம்.ஜி.ஆர்., புகழை பட்டி தொட்டி எல்லாம் 

அ.தி.மு.க., கொண்டு சேர்க்கவில்லை. 

 

இவ்வாறு அண்ணாமலை கூறினார். 

++++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க