tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 25–
 தி.மு.க., கூட்டணி விரைவில் உடையப் போகிறது   என  ஜோதிடராகவே மாறி விட்டார் பழனிசாமி. திமுகஅணியில் விவாதங்கள் இருக்கலாமே தவிர, விரிசல் எதுவும் இல்லை. பழனிசாமியின் அரசியல்2026 தேர்தலுடன் நிறைவுக்கு வந்து விடும்  என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார். 
    மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ  கும்மிடிப்பூண்டி வேணு பேரனும், திருவள்ளூர் மாவட்ட  ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரியின் மகனுமான ஸ்டாலின், யுவஸ்ரீ திருமணத்தை சென்னை அறிவாலயத்தில்  முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்தார். அப்போது அவர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்து ஆவேசமாக பேசியது: 
    
சென்னையில் மழை என்றால் போதும். உடனே, சேலத்திற்கு சென்று பதுங்குபவர் பழனிசாமி. கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி... இப்படி சேலத்துக்கு சென்று பதுங்குவது தான் வாடிக்கை. மக்களால் ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி என்றைக்கோ செல்லாக்காசாகி விட்டார்.
திடீர் ஜோதிடர்
 ஆனால், போகும் இடமெல்லாம் தி.மு.க., குறித்து அங்கலாய்க்கிறார். தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கிற பொறாமை காரணமாக, ‘தி.மு.க., ஆட்சியின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது; தி.மு.க., கூட்டணி விரைவில் உடையப் போகிறது’ என, பேசுகிறார். 
இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, பழனிசாமி கற்பனையை கடந்தவராக மாறி விட்டார்; அதாவது ஜோதிடராகவே மாறி விட்டார். ஏன் அப்படி மாறினார் என தெரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.     தி.மு.க., கூட்டணி என்பது, தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி.
எங்கள் கூட்டணிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம். அதெல்லாமே ஜனநாயக ரீதியிலானது. அதற்காக, கூட்டணிக்கு குழப்பம் என்று யாரும் நினைக்க வேண்டியதில்லை. அப்படி நினைத்தால், அவர்கள் ஏமாந்து போவர். 
எங்கள் கூட்டணியில் நடக்கும் விவாதங்கள் சண்டைக்கானது அல்ல; வளர்ச்சிக்கானது. அதை விரிசல் என யாரும் தவறாக புரிந்து கொண்டால், புரிந்து கொள்பவர்களின் இயலாமையாகத்தான் பார்க்க முடியும். என்றைக்கும் எங்களுக்கு விரிசல் இருக்காது. மக்கள் பக்கபலம்
தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் பக்க பலமாக உள்ளனர். அதனால், வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல; அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும், தி.மு.க., தான் வெற்றி பெறும். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். 
தமிழகத்தில் மக்களாட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அதனால் இன்றைக்கல்ல; என்றைக்குமே மக்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாகத்தான் இருப்பர். வரும் 2026 தேர்தலோடு பழனிசாமி அரசியல் நிறைவுக்கு வந்து விடும்.  2026 மட்டுமல்ல, அதை தொடர்ந்து  வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் .
இவ்வாறு அவர் பேசினார்

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க