tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 16–அற்பமான காரணங்களை சொல்லி அரசியல் செய்யும் பரிதாப நிலைக்கு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்’ என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கிண்டலடித்துள்ளார்.
    
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கைக்கு, அவர் அளித்துள்ள பதில் அறிக்கை:
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சென்னையில் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக, எதிர்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
படிக்கவில்லை
கடந்த, 30ம்தேதி மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார். மாவட்ட நிர்வாகங்கள், மழையை எதிர்கொள்ள செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்; உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதெல்லாம் செய்தியாக வெளியானது; அதை பழனிசாமி படிக்கவில்லை
விளம்பரமோகம்    முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தபோதும், பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் காலங்களில், தனக்கு விளம்பரம் கிடைக்காதா என்று பழனிசாமி காத்திருக்கிறார். பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் அளித்த நிவாரண பொருட்களில், ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டியவர்களிடம் விளம்பர மோகம் தானே இருக்கும்.    துணை முதல்வர் பதவியை இன்று பரிகாசம் செய்யும் பழனிசாமி, தன்னை துணை முதல்வராக்க வேண்டும் என, வேலுமணி மிரட்டிய போது, தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியை கொடுத்தது ஏன்?. 

அருகதையில்லை

தன் ஆட்சியை காப்பாற்றி கொள்ள, துணை முதல்வர் பதவியை கேடயமாக பயன்படுத்திய பழனிசாமிக்கு, விளம்பரம் பற்றி பேச அருகதை இல்லை. சட்டசபையில், அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை தானே வெளியிட்டு விளம்பரம் தேடியவர் தான் பழனிசாமி .
சென்னை மாநகராட்சி ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் மட்டுமே பங்கேற்றார்; அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்று, பழனிசாமி கேட்டிருக்கிறார்.
 கடந்த 30 ம் தேதி முதல்வர் நடத்திய கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
 தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமியை யாரோ எழுப்பி, தேர்தல் வரப்போகிறது, தினமும் அறிக்கை விடுங்கள் என்று சொல்லியிருக்கின்றனர். அதனால், இப்படி அற்பமான காரணங்களை சொல்லி அரசியல் செய்யும் நிலைக்கு, அவர் தள்ளப்பட்டுள்ளார்.இவ்வாறு நேரு கூறியுள்ளார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க