tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

பண்ருட்டி ராமச்சந்திரன் விளாசல்

 

சென்னை, நவ. 11– 

பழனிசாமியை முதல்வர் ஆக்கவா விஜய் புதுக்கட்சி துவங்கினார்... என்று பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், மறைந்த கருணாநிதி, எம்ஜிஆர் அமைச்சரவைகளில் மந்திரி பதவி வகித்தவர். இவர் தனது 88வது பிறந்தநாளை சென்னை அசோக் நகரில் உள்ள இல்லத்தில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு அதிமுக, பன்னீர்செல்வம் அணியினர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்.

நிருபர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது:

புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு என் வாழ்த்துகள். அவர், தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுகவையும், மத்தியில் ஆளும் பாஜவையும் விமர்சித்திருக்கிறார். விஜய் அரசியல் அணுகுமுறை பாராட்டத்தக்கது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை 2026 சட்டசபை தேர்தலில் 200 இடங்களை கைப்பற்றுவோம் என்று கூறுவது அவர்களது தன்னம்பிக்கையையும், கூட்டணி பலத்தையும் காட்டுகிறது. இவர்களை எதிர்த்து வலுவாக போட்டியிடக்கூடிய எந்த அணியும் இதுவரை தெரியவில்லை. 

அதிமுகவை வழி நடத்துவோர் தங்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள். அதேபோல, ஒற்றுமையும் தேவையில்லை என்று என்கிறார்கள். நோயே இல்லாதவனுக்கு மருந்து எதற்கு? என்னை பொறுத்தவரை, 2026 சட்டசபை தேர்தலில், அதிமுக சாதிக்கும் என்று நான் நம்பவில்லை.

தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்புவதாக சொல்கிறார்கள். அப்படி கூட்டணி அமைந்தாலும் யார் முதல்வர் என்பதில் சிக்கல் இருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜவை சேர்ந்த ஒருவரைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொன்னதால்தான், பழனிசாமி பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினார். இப்போது விஜய்யை முதல்வராக்க பழனிசாமி விரும்ப மாட்டார். அதேபோல, பழனிசாமியை முதல்வர் ஆக்கவும் நடிகர் விஜய் கட்சி தொடங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

====================

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க