tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

லக்னோ, நவ.17–
உத்தரப்பிரதேச பாஜ அரசில் கேபினட் அமைச்சராக இருப்பவர், நந்த கோபால் குப்தா. அவரது சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை, ரிதேஷ் ஸ்ரீவாஸ்தவா என்ற  உதவியாளர் பராமரித்து வருகிறார்.
ரிதேஷுக்கு,  வாட்ஸ் ஆப்பில் நேற்று ஒரு அவசர தகவல் வந்தது. அதன் புரொபைல் படத்தில் அமைச்சர் மகனின் படம் இருந்தது. அதில், ‘அவசரம். நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். அது முடிய சிறிது நேரம் ஆகலாம். உடனடியாக ரூ.2.08 கோடியை சிலருக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. அவர்களின் வங்கிக்கணக்கு எண்களை இணைத்திருக்கிறேன். உடனடியாக டிரான்ஸ்பர் செய்து விடுங்கள்’ என்று தகவல் இருந்தது.
இதனால், ரிதேஷ் அவசர அவசரமாக அந்த வங்கிக் கணக்குகளுக்கு ரூ.2.08 கோடியை  டிரான்ஸ்பர் செய்திருக்கிறார். பிறகு, ‘பணத்தை டிரான்ஸ்பர் செய்து விட்டேன்’ என்று வாட்ஸ்ஆப்பில் பதில் அனுப்பினார். சிறிது நேரத்துக்குப் பின், பணம் அனுப்பிய தகவலை நேரடியாகத் தெரிவிக்க, அதே வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த வாட்ஸ் ஆப் எண் செயல்படவில்லை.
 இதனால், அமைச்சர் மகனின் வேறு போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, பணம் அனுப்பிய தகவலைக் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அமைச்சர் மகன், ‘பணம் அனுப்ப நான் வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பவில்லையே? எந்த எண்ணில் இருந்து தகவல் வந்தது? எந்த வங்கிக்கணக்குக்கு பணம் டிரான்ஸ்பர் செய்தீர்கள்? உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும்’ என்று கண்டித்திருக்கிறார்.  இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு செய்து புலனாய்வை தொடங்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘அமைச்சர் மகன் பெயரிலான வாட்ஸ்ஆப் கணக்கு, இரு நாட்களுக்கு முன்தான் கோல்மாலாகத் துவக்கப்பட்டுள்ளது. அதற்கு பயன்படுத்தப்பட்ட போன் எண்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட வங்கிகளைத் தொடர்பு கொண்டு பேசினோம். அந்த வங்கிக்கணக்குகளை முடக்கிவைக்க இ-மெயிலில் அதிகாரப்பூர்வ தகவல் அனுப்பப்பட்டது. அந்த வங்கிக்கணக்குகள் தொடர்பாக வங்கியில் உள்ள விவரங்கள் பெறப்பட்டன. கோல்மால் கும்பலை மடக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. சைபர் பிரிவின் இரு குழுக்களும், குற்றப்பிரிவு சிறப்பு பிரிவும் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன’’ என்றனர்.
அமைச்சர் நந்த கோபால் குப்தா கூறுகையில், ‘‘ரிதேஷ் நேர்மையானவர், நம்பிக்கையானவர். அவசரத்தால், இப்படி ஒரு பிரச்னை வந்திருக்கிறது. வாட்ஸ்அப் தகவல் வந்ததும் அவர் போன் செய்து விசாரித்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. வாட்ஸ் அப் தகவலில், முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால் உடனடியாகப் பேசவில்லை என்று கூறினார். அது நியாயமான காரணம்தான். சிறிது நேரத்தில் வேறு போன் எண்ணில் அவர் பேசியிருக்காவிட்டால், உடனடியாக விசாரணையைத் தொடங்க முடிந்திருக்காது. எனவே, அவரைக் குறைகூற முடியாது’’ என்றார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க