tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 16–

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நிறைவேறும் என்றால், அதை தவிடுபொடியாக்கும் அரசியல் போராட்டத்தை தேசிய அளவில் நடத்துவோம்’ என, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.    ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.,வின் வெறுப்பு அரசியலை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் சார்பில், ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன கூட்டம், சென்னையில்  நடந்தது.
     விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘‘காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வெறுப்பு அரசியலை பரப்புகின்றனர். ராகுல், 2029ல் தன் ஆட்டத்தை துவக்குவார். பா,ஜ., ஆட்சிக்கு முடிவு கட்டுவார்,’’ என்றார்.
வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நிறைவேறும் என்றால், அதை தவிடுபொடியாக்கும் அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும்,’’ என்றார்.
    
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசுகையில், ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க முடியாது. அமெரிக்காவை போல அதிபர் ஆட்சி கொண்டு வர வேண்டும் என, பிரதமர் மோடி மனக்கணக்கு போடுகிறார். அவரது திட்டத்தை தோற்கடிக்க, நாடு முழுதும் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்த வேண்டும்,’’ என்றார்.
    
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘‘அஹிம்சையை கடைப்பிடிக்கும் ராகுலை, தனிப்பட்ட முறையில் அவதுாறாக பேசுகின்றனர். இந்த முதல் கூட்டம், இனி இந்தியா முழுதும் தீப்பொறியாக பரவும்,’’ என்றார்.
கனிமொழி

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:
பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., வெறுப்பு அரசியல் விதையை விதைக்கின்றன. அந்த விதைகளை வேரறுக்க வேண்டும்; அப்போது தான் நாட்டை காப்பற்ற முடியும். பா.ஜ., பொய்யை முன்வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறது; ராகுல் அன்பின் அரசியல் நடத்துகிறார். 
உ.பி., குஜராத் மாநிலங்களில் இருந்து தான், வெளிநாடுகளுக்கு மாட்டுக்கறி அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடத்துகிற பள்ளி பாடப்புத்தங்களில், ‘காந்தி விபத்தில் இறந்தார்’ என, கற்பிக்கப்படுகிறது. 
ராகுல், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள், பா.ஜ.,வினரின் உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க