tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:

 

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது அல்ல. இரு மாநிலங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளனர். ஒரு மாநிலத்தின் பட்ஜெட் போல உள்ளது, தொடர்ந்து மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு, மாநில வரிகளை பறித்துக் கொண்டு, மாநிலங்களுக்கு வரவேண்டிய நிதியை தரவில்லை என்றால், மாநிலத்தை எப்படி நிர்வகிப்பது.

 

மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என தெரியவில்லை. தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தங்களுக்கு ஓட்டளிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது.

 

சென்ற ஆண்டைவிட தற்போது குறைவான நிதியையே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கிராமப்புறங்களில் இருக்கின்ற சாமானிய மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு பட்ஜெட். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், அவர்களை பாதுகாப்பதாகவும் மத்திய பட்ஜெட் உள்ளது. பணக்கார முதலாளிகளை வளர்த்து விடும் திட்டங்கள் மட்டுமே உள்ளன. 

மக்கள் விரோத பட்ஜெட்டாக பா.ஜ., அரசின் பட்ஜெட் உள்ளது. தமிழக மக்களுக்கு எதிராகவும், நல்லாட்சிக்கு எதிராகவுள்ள இந்த மத்திய பா.ஜ., அரசை விரைவில் பதவியில் இருந்து இறக்கி காட்டுவோம்.

 

அது விரைவில் நடக்கும். ஏழை மக்களுக்கான பட்ஜெட் கொடுக்கும் அரசு அமைய வேண்டும். அதற்கான ஆட்சியை விரைவில் உருவாக்கி காட்ட வேண்டும்.

 

இவ்வாறு அவர் பேசினார்.

+++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க