tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 6– 

தமிழகத்தில் பா.ஜ.வை நோட்­டா­வுடன் போட்டி போடும்­கட்சி என்­றார்கள். இல்­லை.நாங்கள் இப்­போது வளர்ந்து விட்­டோம். வாக்­கு­ச­த­வீதம் அதி­க­ரித்­ததே வெற்றி தான். 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் இலக்கு; அதற்காக கடுமையாக உழைப்போம் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

 தமி­ழ­கத்தில் தேர்தல் முடி­வுகள் கு­றித்து சென்­னையில் நேற்று அண்­ணா­ம­லை அளித்த பேட்டி:

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஓட்டுகளை பா.ஜ., பெற்றுள்ளது. இதுவரை, தாமரை சின்னத்திற்கு ஓட்டு கிடைக்காத இடங்களில் எல்லாம் தற்போது ஓட்டுகள் கிடைத்துள்ளன. தமிழக பா.ஜ.,வினர் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மக்கள் சொல்லி இருக்கின்றனர். 

பா.ஜ., 20 சதவீதம் ஓட்டுகள் பெற வேண்டும்; தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டு, 25 சதவீதத்தை தாண்ட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அதிக ஓட்டுகளை கூட்டணி வாங்கியுள்ளது. நான் கோவையில் வாங்கிய ஓட்டுகள் அனைத்தும், பணம் கொடுத்து வாங்காதவை. 

இன்று, 11 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளோம். குறுக்கு வழியில் செல்லாமல், எங்கள் பணியில் சோர்வு அடையாமல், 2026க்கு நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுள்ளோம்.

நோட்டா கட்சி அல்­ல..

 தமிழகத்தில், ‘நோட்டா’ கட்சி என்று விமர்சிக்கப்பட்ட பா.ஜ., இன்று அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ளது. வரும் காலத்தில் எங்கள் முயற்சி இரட்டிப்பாகும். 

திராவிட கட்சிகளை எதிர்த்து, தனித்து நின்று போட்டியிட்டோம். நாங்கள் செல்லக்கூடிய பாதை சரியானது. அதில் தொடர்ந்து பயணிப்போம்; செல்லும் வேகத்தை குறைக்க மாட்டோம். 

எனவே, எங்களுக்கு ஏற்பட்டதை தோல்வியாக பார்க்கவில்லை. ஓட்டு சதவீதம் அதிகமாகி இருப்பது, ஒரு விதத்தில் வெற்றி. 

 இதுவரை சரித்திரத்தில் வாங்காத ஓட்டுகளை, கோவையில் வாங்கி இருக்கிறோம். 

கோவையில் அ.தி.மு.க.,வுக்கு ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், பா.ஜ.,வுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அ.தி.மு.க., கோட்டை எனப்படும் கோவையில் பா.ஜ., டிபாசிட் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் இலக்கு. தென் மாவட்டங்களில் பா.ஜ., நேர்மறையான அரசியலை கையில் எடுத்துள்ளது.

கட்­சியை வளர்க்­கி­றேன்

 

ஒரு கட்சி படிப்படியாக தான் வளரும். எனக்கு கொடுக்கப்பட்ட பணி, கட்சியை வளர்ப்பது. அதை தான் நான் செய்கிறேன். நாளையே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல. 

பா.ஜ.,வை விமர்சித்த அ.தி.மு.க., தலைவரின் மகன், ஏற்கனவே எம்.பி.,யாக இருந்தும், அவர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சென்னை, மதுரை என, பல தொகுதிகளில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி வரும் என்பது என் கணிப்பு. 

 

நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன்; அக்கட்சி நேர்மையாக தேர்தலை சந்தித்தது. திராவிட அரசியலில் இருந்து மக்கள் வெளியே வர ஆரம்பித்து விட்டனர் என்பதை, நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுகள் சொல்கின்றன.

என் தந்தை அரசியல்வாதி இல்லை; விவசாயி. என் தந்தை கருணாநிதியாக இருந்திருந்தால், நான் வெற்றி பெற்றிருப்பேன். 

 

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க