tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன்.10-

நாட்டின் பிரதமராக 3-வது முறை பதவி ஏற்றுள்ள மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘‘தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள். பிரதமராக, அரசியல் அமைப்பை நிலைநிறுத்தவும், நமது நாட்டின் மதசார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டாட்சியை நிலை நிறுத்தவும், மாநிலங்களின் உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையான உணர்வோடு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்’’.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கவர்னர்

ஆர்.என்.ரவி வாழ்த்து

3-வது முறை பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், பிரதமராக மோடி பதவி ஏற்ற புகைப்படத்தை தனது ‘எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தி வருமாறு:-

‘‘தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடிக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்.வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி தனது 3-வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள். தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள்.

பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்’’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க