tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே.22-

புதிய வகை கொரோனா பரவி வருவதால், பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் நேற்று, வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-

கடந்த சில வாரங்களாக சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது.

பயமோ, பதற்றமோ

வேண்டாம்

புதிய வகையான கேபி.2 என்ற வைரஸ் ஒமைக்ரானின் ஒரு வகையை சேர்ந்தது தான். ஏற்கனவே, இந்தியாவில் சில பகுதிகளில் இந்தவகை கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை நாம் பயமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை.

லேசான பாதிப்பு மட்டுமே தான் பதிவாகியுள்ளது. மிகப்பெரிய பாதிப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை. தமிழகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதனால் இந்த வகை பாதிப்பு ஏற்பட்டாலும் லேசான பாதிப்பாக தான் அது இருக்கும். ஆனாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீட்டில் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் இருக்கும் பொழுது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு உடனே தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்பொழுது கொரோனா பாதிப்பும் மற்ற பருவ நிலையில் ஏற்படக்கூடிய நோய் பாதிப்பு போல மாறிவிட்டது.

வருடத்திற்கு ஒரு சில காலங்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அச்சம் தேவையில்லை. தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டதால் போதுமான எதிர்ப்பு சக்தி நம்மிடம் இருக்கிறது. அப்படி பாதிப்பு அதிகரித்தாலும் அதனை சமாளிக்கக்கூடிய கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அச்சம் வேண்டாம்

புதிய வகை கொரோனாவால் அச்சம் வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் மீண்டும் மாறுபாடு அடைந்து தீவிரமாக தாக்கி வருகிறது. இந்த மாறுபாடுகள் கே.பி.1, கே.பி.2 என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த தொற்று பரவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் நிலையில், இந்தியாவிலும் இந்த புதிய வகை கொரோனா 300-க்கு மேற்பட்டோரை தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில் கே.பி.2 வகை கொரோனா 290 பேரையும், கே.பி.1 வகை தொற்று 34 பேரையும் பாதித்து இருக்கிறது. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 23 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் இவை அனைத்தும் ஜே.என்.1 மாறுபாட்டின் துணை மாறுபாடுதான் என கூறியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், இதில் ஆஸ்பத்திரிகளில் சேர்க்க வேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினை எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் அச்சமோ, பதற்றமோ தேவை இல்லை என்றும் சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க