tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 30–

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதன்பின்னர் அந்தப் பதவிக்கு வேறு யாரும் நியமிக்கப்படாமல் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கவனித்து வந்தார்.அதன் பிறகு ஜார்க்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கவனித்து வந்தார். தற்போது அவர் மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து புதுச்சேரிக்கு என தனியாக ஒரு துணை நிலை ஆளுநரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதன், புதுச்சேரிதுணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  

யார் இந்த கே.கே.?

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான கே.கைலாசநாதன், கேரளாவைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் வேதியியல் முதுகலை பட்டம் பெற்றவர். 1979 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கைலாசநாதன், முதல்முறையாக சுரேந்திரநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர், சூரத் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டார். குஜராத்தின் கிராமப்புற மேம்பாடு, தொழில்துறை, குஜராத் கடல்சார் வாரியம், நர்மதா வாரியம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1994 முதல் 1995 ம் ஆண்டு வரை, குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்தார் கைலாசநாதன். 1999 மற்றும் 2001 க்கு இடையில், அகமதாபாத் மாநகராட்சி ஆணையராக பதவி வகித்தார். பின்னர், 2006ஆம் ஆண்டு, குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

சூப்பர் சிஎம்

45 ஆண்டுகளாக குஜராத் அரசில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தவர். குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது, அதிகார மையமாக திகழ்ந்தவர். கடந்த 2014ம் ஆண்டு, மோடி, பிரதமரானதை தொடர்ந்து, குஜராத்தில் மோடியின் காதுகளாகவும் கண்களாகவும் இருந்தவர் கே. கைலாசநாதன். சூப்பர் சிஎம் என சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றவராக இருந்தார். 

 தனக்காகவே உருவாக்கப்பட்ட தலைமை முதன்மை செயலாளர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தபோது, அவருக்கு மத்திய அரசில் முக்கிய பதவி வழங்கப்படும் என பேசப்பட்டது. குறிப்பாக, ஆளுநர் பதவியோ அல்லது துணை நிலை ஆளுநர் பதவியோ வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீப காலமாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அங்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க