tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவள்ளூர், ஜூன் 13

பூந்தமல்லி, பொன்னேரி கிளைச் சிறையினை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா, கலெக்டர் பிரபுசங்கர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, பொன்னேரி கிளை சிறையினை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா தலைமையில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.த. பிரபு சங்கர், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன்ஜமால், செங்குன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.சு. பாலகிருஷ்ணன், மாவட்ட மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சி. சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் கே. மோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி தீனதயாளன் ஆகியோர் முன்னிலையில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சிறையில் உள்ள கைதிகளுக்கு அளித்து அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, சுற்றுப்புறங்கள், உணவு தரமான உள்ளதா என்பதை சிறை கைதிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவர்கள் வருகை பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம்(பாரா), சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையலறை, சட்ட சேவை மையம் , கைதிகளின் நேர்காணல் அறை, போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் சேதமடைந்த கட்டிடங்களை எடுத்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொன்னேரி சார் ஆட்சியர் சங்கத் பல்வந்த் வாஹே, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, துணை கண்காணிப்பாளர்கள், சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணராஜ் (பூந்தமல்லி), கோவிந்தராஜ் (பொன்னேரி) வட்டாட்சியர்கள் மதிவாணன் (பொன்னேரி), கோவிந்தராஜன் (பூந்தமல்லி) மற்றும் காவல் துறையினர்கள் உட்பட பலர் உள்ளனர்.

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க