tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருச்சி, செப். 24–

பெண்களுக்குஆடை கட்டுப்பாடுகள் விதிப்பதை கைவிடவேண்டும் என்று கனிமொழி எம்.பி.கூறினார்.

 திருச்சியில் திராவிடப்பள்ளி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. நான்காம் ஆண்டு தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி. சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

மத்தியில் ஆட்சியில் இருக்கிறவர்கள், அதிகாரத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறது. மதவாத அரசியலை, சாதி அரசியலை, பிரிவினை அரசியலை தொடர்ந்து செய்யும் சூழலில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். சாதி, மதஅரசியல் கொள்கையை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்றால், எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு தான் நாம் இங்கு வந்து நிற்கிறோம். இன்று எல்லோருடைய கையிலும் எல்லாம் இருக்கிறது. இன்று ஒரு கல்வி கொள்கையை கொண்டு வந்து அதை திணிக்கப் பார்க்கிறார்கள்.

 அவர்கள் இன்னும் 30ஆண்டுகள் கழித்து எந்த விகிதத்தில் கல்லூரிக்கு போகும் மாணவர்கள் பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதை எப்போது கடந்து விட்டது தமிழ்நாடு. புதியகல்வி கொள்கையை நாம் எழுதி அவர்களுக்கு கொடுக்கவேண்டும். பள்ளியில் மாணவர்கள் இல்லை என்றால்பள்ளிக்கூடங்களை மூடி மாணவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமாம். தமிழ்நாட்டில் ஒரு மாணவனோ,மாணவியோ இருந்தாலும் பள்ளிக்கூடம் இயங்கும். இதற்கு காரணம் திராவிட மாடல் தலவர்கள் தான். சுயமரியாதை, சாதி சான்றிதழ் என்பது உனது சாதி என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அல்ல.மாறாக உனக்கு மறுக்கப்படும் உரிமைகள், சலுகைகள் உனக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே சாதி சான்றிதழ். இதற்காகத்தான் திராவிட பள்ளி துவக்கப்பட்டது. அடிப்படையிலேயே பெண்கள் மீது திணிக்கப்படும் ஒன்று– ஒரு ஆண் உன்னை எப்படி பார்க்க வேண்டும் என்று தீர்மானிப்பது உன்னுடைய பொறுப்பு என்று சொல்வார்கள்.இதை விட ஒரு பொய் உலகத்தில் இல்லை.

ஆடைகட்டுப்பாடு

தயவுசெய்து பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடுவிதிப்பதை கைவிடுங்கள். நீ என்ன உடை உடுத்துகிறாய் என்பதில்தான் ஆரம்பிக்கிறது உன்னுடைய சுதந்திரம். அதன் பிறகு தான் மற்ற எல்லா முடிவுகளும். பெண் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை வைத்துதான் எல்லாம். அதே போலஆண்களும் இதைபுரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க