tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஜல்கான், ஆக. 27–

 

‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இதில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதுபோல, இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவுபவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்,’’ என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 மஹாராஷ்டிர மாநிலம் ஜல்கானில், லட்சாதிபதி சகோதரிகள் மாநாடு நடந்தது. இதில், 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

மேலும், 4.3 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 2,500 கோடி ரூபாய் சுழல் நிதியை விடுவித்து, 5,000 கோடி ரூபாய் வங்கிக் கடன்களை வழங்கினார்.

  இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

பெண்களின் பாதுகாப்பே நம் நாட்டின் முன்னுரிமையாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக செங்கோட்டையில் இருந்து பலமுறை பேசியுள்ளேன். நம் சகோதரிகள், பெண்களின் மன வலியை நான் உணர்கிறேன்.

அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து அரசுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்பதை உணர வேண்டும். இதில், குற்றவாளிகளை எந்தவிதத்திலும் தப்பிக்க விடக் கூடாது. 

இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டுமல்ல; நாடு முழுதுக்கும் பொருந்தும்.

மன்னிப்பே கிடையாது

  இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தப்பிக்க விட, காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. 

அது பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் என, எந்த அமைப்பாக இருந்தாலும், அலட்சியமாக இருக்கக் கூடாது. அனைவரையும் பொறுப்பாக்க வேண்டும். இந்த தகவல், மேல் மட்டத்தில் இருந்து கீழ் வரை செல்ல வேண்டும்.

. இந்த பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது. 

 அரசுகள் வரும், போகும். ஆனால், பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு. அது அரசாக இருந்தாலும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி.

பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசுகள் எடுத்ததைவிட பல மடங்கு அதிக நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் என்பது, பெண்களுக்கு வருவாயை மட்டும் தரவில்லை. அது, எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றலை தருகிறது. இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது. இதில், பெண்களின் பங்கு மிகப் பெரியது. 

ஒவ்வொரு வீடு மற்றும் குடும்பத்தின் வளர்ச்சியை பெண்களே உறுதி செய்கின்றனர். ஆனால், பெண்களுக்கு அது போன்ற உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. பெண்களின் பெயர்களில் வீடு வாங்க முடியாது, அதற்கு வங்கிக் கடன் கிடைக்காத நிலை இருந்தது. சுயதொழில் செய்வதற்கு கடன் வாங்க முடியாத நிலை இருந்தது. அதை மாற்றியுள்ளோம்.

ஒரு சகோதரனாக, மகனாக, உங்களுடைய வாழ்க்கையை மாற்ற நான் உறுதி ஏற்றுள்ளேன். வீடில்லாதோருக்கு மூன்று கோடி வீடுகள் கட்டி தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த மூன்று கோடி வீடுகளும், பெண்களின் பெயரில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க