tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 2–

திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டுக்கு தமிழ்நாடு எடுத்துக்காட்டாக திகழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார். கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய 70 சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டாட்சி அமைப்புகளுக்கு ரூ.1.18 கோடி காசோலையுடன் மணிமேகலை விருதுகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 516 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 6,135 பேருக்கு ரூ.31 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகளை அவர் வழங்கினார்.

  விழாவில் உதயநிதி பேசியதாவது: 

  கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள்நடைபெற்ற கடந்த கால ஆட்சியில். மகளிர்சுயஉதவிக்குழுக்களுக்கு 84 ஆயிரத்து 815 கோடி ரூபாய் மட்டுமே வங்கிக்கடன் இணைப்பாக வழங்கப்பட்டது. ஆனால் நமது திராவிடமாடல் அரசு அமைந்தது முதல் இந்த நாள் வரை 92 ஆயிரம்கோடிரூபாய் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, கடந்த கால ஆட்சியான 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் இணைப்புத் தொகையை விட அதிகமாக திராவிடமாடல் அரசு மூன்றே ஆண்டுகளில் வழங்கியிருக்கிறது. திராவிடமாடல்அரசுஅமைந்தபிறகுதான், தற்போதுமீண்டும்மணிமேகலை விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதுதான், மகளிர் முன்னேற்றத்தில் நம் திராவிடமாடல் அரசுக்கு இருக்கும் அக்கறைக்கு எடுத்துக்காட்டு.

உரிமைத் தொகை

 பெண்களை, மேலும்ஊக்கப்படுத்தும்விதமாகவும், அவர்களுடையவாழ்க்கைப்பயணத்திற்குதுணைநிற்கும்விதமாகவும்,, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒருகுடும்பம் சிறந்து விளங்குவதற்கு பெண்கள்தான் முதுகெலும்பாய் இருக்கிறார்கள். பெண்களுடைய உழைப்பை அங்கீகரித்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம்மாதம் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார் நமதுமுதலமைச்சர். இந்தஓராண்டில் ஒருகோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்உரிமைத்தொகைவழங்கப்பட்டுள்ளது. 

மகளிர் மேம்பாடு

 இந்ததிட்டங்களின் தாக்கம்எ ப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் இப்போது ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டிற்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திராவிடமாடல் பொறுத்தவரை எல்லாத்துறைகளிலும் எல்லாத்திட்டங்களிலும்ச மூகநீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பது தான் அடிப்படை கொள்கை. அதன்படி, எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்கள் மேலே எழுந்து வரவேண்டும் என்றநோக்கத்தில் தான் திட்டங்களை உருவாக்குகிறது.

கடந்தஆண்டுகளைப்போலவே, இந்தஆண்டும் இலக்கைவிட அதிகஅளவு கடன் வழங்கி சாதனை படைப்போம்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

++++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க