tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை, ஆக. 23–

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பொறுப்பற்ற முறையில்பேசுவதா என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட பாசனத் தேவையின் முக்கிய ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. அதே சமயம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு - கேரளா இடையே தொடர் பிரச்னையும் இருந்து வருகிறது.இதுகுறித்து அண்மையில் பேசிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, முல்லைப் பெரியாறு அணை இப்போது பாதுகாப்பானதாக இல்லை. முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது என்று பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்தார்.

  இதற்காக சுரேஷ்கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை இன்றைக்கும் வலுவாக இருப்பதற்குக் காரணம், அந்த அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்பது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க கண்காணிப்புக் குழு ஒன்றும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு என்பது காடுகளை அழித்தல், திட்டமிடாத கட்டுமானப் பணிகள், மரங்களை வெட்டுதல், சட்டவிரோத குடியேற்றங்கள், கனிம வளங்களை சுரண்டுதல் போன்ற மனிதர்கள் உண்டாக்கிய காரணங்களால் உருவானது. ஆகவே, மனிதர்களால் உருவாக்கப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட நிலச்சரிவுடன் முல்லைப் பெரியாறு அணையை ஒப்பிட்டு பேசுவது பொருத்தமாக இருக்காது.

 வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல், சமூக வலைதளங்களில் பரவும் கற்பனை வீடியோக்களை பார்த்து பொறுப்புள்ள ஒரு மத்திய அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மத்திய அமைச்சர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர். அவர் ஒரு மாநிலத்திற்கு சாதகமாக, மற்றொரு மாநிலத்திற்கு பாதகமாக பேசுவது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயல். இதுபோன்ற பேச்சு பதற்றத்தை உருவாக்கும். இனி வரும் காலங்களில் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க