tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 2–

 

 

‘தன் மகளுக்கு ஜக்கிவாசுதேவ் திருமணம் செய்து வைத்து, வாழ்க்கை அமைத்து கொடுக்கும் போது, மற்ற பெண்கள் மொட்டை அடித்து, துறவியர் ஆவதை ஊக்குவிக்கலாமா’ என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கோவை வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தாக்கல் செய்த மனு:

யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்ற என் மகள்கள் கீதா, லதா, அங்கேயே தங்கி விட்டனர். தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என, அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஈஷா மையத்துக்கு எதிராக, நாங்கள் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக, இரண்டாவது மகள் வாயிலாக நிர்ப்பந்திக்கின்றனர்.

என் மகள்கள் இருவரும், ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்தால், அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். 

 

மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகள்கள் இருவரும் நீதிபதிகள் முன் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பின், பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். 

தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, செட்டில் செய்த ஜக்கிவாசுதேவ், மற்ற இளம் பெண்கள் மொட்டை அடித்து, துறவியர் ஆவதை ஊக்குவிக்கலாமா என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு, நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும், ‘திருமணம் செய்து கொள்வது, அந்த பெண்ணின் விருப்பம்’ என, பதில் அளித்தனர். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.புருஷோத்தமன், ‘‘ஈஷா மையத்தின் நடமாடும் மருத்துவ சேவையில் பணியாற்றிய மருத்துவர், பள்ளி குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார். 

உத்தரவ।

 

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் மகள்கள் இருவரும், கோவை ஈஷா மையத்தில் சேர்ந்துள்ளனர். பெண்கள் சிலரை மூளைச்சலவை செய்து, துறவியராக ஈஷா மையம் மாற்றுவதாகவும், பெற்றோர், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மையத்தில் நிலவும் சூழ்நிலையை, மனுவில் விமர்சித்துள்ளார். ஈஷா மையத்தின் மருத்துவர் ஒருவருக்கு எதிராக, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மனுதாரர் தெரிவித்தார். குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 ஈஷா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்களும் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள, மேலும் விரிவாக ஆராய வேண்டியதுள்ளது. எனவே, ஈஷா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விபரங்களை, மனுதாரரும், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும்.

 ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை, இளைய மகள் லதா, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக, மனுதாரருக்கு, மொபைல் போன் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்தும், கோவை போலீசார் விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரணையை, வரும் 4ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க